சோழசிராமணி அருகே மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி

சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி பரிசுகளை வழங்கிய போது எடுத்த படம்.
இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி பரிசுகளை வழங்கிய போது எடுத்த படம்.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இறகு பந்து போட்டி தொடக்க விழாவிற்கு சோழசிராமணி ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் சந்திரசேகரன் முன்னிலை வைத்தார். தனியார் பள்ளி தாளாளர் தேவராஜன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில், கவுந்தப்பாடி அணி முதலிடத்தையும், திருச்செங்கோடு அணி 2-ம் இடத்தையும், ஜேடர்பாளையம் 3-ம் இடத்தையும், சோழசிராமணி அணி 4-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப்பைச் சேர்ந்த பரத் நன்றி கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com