மாநில அளவிலான இறகு பந்து போட்டி - பிரன்ட்லைன் பள்ளி மாணவியர் தங்கம் வென்று சாதனை

2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
மாநில அளவிலான இறகு பந்து போட்டி - பிரன்ட்லைன் பள்ளி மாணவியர் தங்கம் வென்று சாதனை
Published on

திருப்பூர் :

பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான இறகுபந்து போட்டி, தர்மபுரி மாவட்டம், டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 39 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.

ஒற்றையர் பிரிவு இதில், திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவி, ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட மாணவியை, 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.

அதேபோல், இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில், விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவியரும், பிரண்ட்லைன் பள்ளி மாணவியரும் மோதினர். இதில், 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி மாணவியர் பிரவந்திகா மற்றும் பிரசிதா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவி யரை, பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com