search icon
என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்
    • உடல் பாகங்கள் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன

    தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது.

    சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே பாறைகளில் சிக்கி காணாமல் போவதும், இறப்பதும் அவ்வப்போது நிகழும்.

    இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு மலையேற்ற வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 12 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த உடல் பாகங்கள் அருகிலுள்ள நகரமான சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டன.

    1986 ஆம் ஆண்டு மலையில் காணாமல் போன 38 வயது மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்பதை டிஎன்ஏ பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது.

    மலை ஏறியவரின் அடையாளம் மற்றும் அவர் இறந்த சூழ்நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை. இருப்பினும், பனிப்பாறைகளின் அடியிலிருந்து கிடைத்ததாக, காணாமல் போன நபருக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நீண்ட காலணி (ஹைகிங் பூட்) மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் (க்ராம்பன்) ஆகியவற்றின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர்.

    "செப்டம்பர் 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மனி நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், மலையேற்றத்திலிருந்து திரும்பாததால் புகார் பதிவு செய்யப்பட்டு, அவர் 'காணாமல் போனவராக' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது கிடைத்திருக்கும் உடல், அவரது உடல்தான் என பரிசோதனையில் உறுதியாகியிருக்கிறது. பனிப்பாறைகள் உருகி குறையும் போது, அவை பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போனதாக கருதப்படும் பல மலையேறுபவர்களை குறித்த விவரங்களை அதிகளவில் கொண்டு வருகின்றன " என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    ஒவ்வொரு கோடை காலத்திலும், ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகும்போது, பல வருடங்களுக்கு முன் காணாமல் போன மனிதர்கள் மற்றும் வேறு பொருட்கள் வெளிப்படுகின்றன. 

    • கேபிள் காரில் நேற்று காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
    • மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 300 பேர் மீட்கப்பட்டனர்.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் நேற்று உச்சிக்கு சென்ற கேபிள் கார் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

    தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லெஸ் டயபிள்ரெட்ஸ் மலைப் பகுதியில் உள்ள பிரபலமான பனிப்பாறையில் கிளேசியர் 3000 ஸ்கை ரிசார்ட் வரையிலான கேபிள் காரில் நேற்று காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.

    இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கேபிள் காரில் ஒரு சிறப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற முடியும் என்றும் கேபிள் கார் நிலையத் தலைவர் தெரிவித்தார்.

    ஆரம்பத்தில், 2,971 மீட்டர் (9,747 அடி) உயரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்கலைச் சரிசெய்யும் நேரத்தில் கண்கவர் காட்சிகளைக் காத்திருந்து மகிழும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    மேலும், மக்கள் காத்திருக்கும் போது மலை உச்சி உணவகத்தில் பானங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    இந்த மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 300 பேர் மீட்கப்பட்டனர்.

    • ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.
    • டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா.

    லாசானே:

    டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடந்தது.

    இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் மூன்றாமிடமும் பிடித்தார்.

    இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    • வெப்பமயமாதல் காரணமாக ஆல்ப்ஸ் பனிப்பறை உருகி வருகிறது
    • பணக்கார ஆல்பைன் நாடான சுவிட்சர்லாந்து, அதன் எரிசக்தி தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது

    தனது நாட்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதன் காரணம் புவி வெப்பமடைவதலின் தாக்கம் என உணர்ந்த சுவிட்சர்லாந்து, தன் நாட்டை கார்பன் நடுநிலைமைக்கு விரைவாக வழிநடத்தும் நோக்கில் பருவநிலை மசோதாவுக்கான வாக்கெடுப்பை வரும் ஞாயிறு அன்று நடத்துகிறது.

    இந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு, சுவிட்சர்லாந்து நாடு இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், பசுமை சார்ந்த வளர்ச்சி வழிகளை மேம்படுத்தவும், வீட்டிலேயே உண்டாக்கக்கூடிய மாற்று எரிபொருள்களை ஊக்குவிப்பதற்கும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தை சார்ந்து கொண்டு வரப்படவுள்ளது.

    சுவிட்சர்லாந்தை 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரலாக மாற்றும் மசோதா, வலுவான பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், கருத்து கணிப்பு நிறுவனமான ஜிஎஃப்எஸ்.பெர்ன் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஆதரவு தற்பொழுது 63% ஆக குறைந்துள்ளதை காட்டுகிறது.

    சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய கட்சியும், வலதுசாரி கட்சியுமான சுவிஸ் மக்கள் கட்சி, இந்த மசோதாவை நிராகரிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், அக்கட்சி இந்த மசோதா பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து வருகிறது.

    காலநிலை மாற்றங்களின் காரணமாக 2001 மற்றும் 2022 வருடங்களுக்கிடையில் பனி அளவுகளில், மூன்றில் ஒரு பகுதியை சுவிஸ் ஆல்ப்ஸ் மலை இழந்தது. இதனால் எரிசக்தி உற்பத்தியை குறைப்பது மற்றும் மோசமான பருவகால மாற்றத்தை எதிர்கொள்வது அவசியம் என்பதை மசோதாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    பணக்கார ஆல்பைன் நாடான சுவிட்சர்லாந்து, அதன் எரிசக்தி தேவையில் முக்கால்வாசியை இறக்குமதி செய்கிறது. பயன்படுத்தும் அனைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது.

    தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள பருவநிலை பாதுகாப்பு சட்டம், எரிசக்தி ஆற்றலில் புதுமை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் பற்றியதாகும். இது சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் வழி செய்கிறது.

    சுவிட்சர்லாந்தில் 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நுகர்வுகளையும் மொத்தமாக தடைசெய்வதற்கான மக்கள் வாக்கெடுப்பிற்காக, பனிப்பாறை முன்முயற்சி என அழைக்கப்படும் காலநிலை ஆர்வலர்களின் முயற்சிக்கு மாற்றாக இந்த சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது.

    அரசாங்கம் தடை யோசனையை புறக்கணித்தது என்றாலும் அந்த முன்முயற்சியின் பிற கூறுகளை உள்ளடக்கிய ஒரு எதிர் திட்டத்தை உருவாக்கியது.

    எரிவாயு மூலமாகவும் எண்ணெய் மூலமாகவும் இயங்கும் வெப்பமாக்கல் அமைப்புகளை, காலநிலைக்கு உகந்த மாற்றுகளுடன் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மற்றும் வணிகங்களை பசுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி நகரச் செய்யவும், ஒரு பத்தாண்டு கால அளவில் 2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதியுதவி வழங்குவதாக இதன் உரை உறுதியளிக்கிறது.

    சுவிஸ் மக்கள் கட்சியை தவிர சுவிட்சர்லாந்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன. அக்கட்சி மட்டும் இது "மின்சாரத்தை வீணடிக்கும் சட்டம்" என நிராகரித்து, அந்நாட்டின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ் இதற்கெதிரான வாக்கெடுப்பைத் தூண்டியது. இக்கட்சியின் நிலைப்பாட்டின்படி, காலநிலை நடுநிலையை கால் நூற்றாண்டுக்குள் அடைவதற்கான இந்த மசோதாவின் இலக்கு, புதைபடிவ எரிபொருள் தடையை குறிக்கும் என்றும் இது எரிசக்தி அணுகலை அச்சுறுத்தும் என்றும் மேலும், இதனால் வீட்டு மின் கட்டணங்களும் உயரும் என்றும் எச்சரிக்கிறது. கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக இக்கட்சி 2021ல் வெற்றிகரமாகப் போராடியது.

    ஆனால் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசு வெளிநாட்டு எரிசக்தி ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை குறைத்தாக வேண்டிய ஒரு உந்துதலில் செயல்பட்டு கொண்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில், பெரிய வணிகங்களுக்கான வரி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுகளுக்கான அமைப்பின் (OECD) தலைமையில் சுவிட்சர்லாந்து இணைய வேண்டுமானால், பன்னாட்டு நிறுவனங்களுக்கான உலகளாவிய குறைந்தபட்ச வரி விகிதம் 15% என இருக்க வேண்டும்.

    750 மில்லியன் யூரோக்களுக்கு ($808 மில்லியன்) மேல் வருவாய் கொண்ட, சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய வரி விகிதத்தை விதிக்கும் திட்டத்தை 73 சதவீத வாக்காளர்கள் ஆதரிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது வரை, சுவிட்சர்லாந்தின் 26 மண்டலங்களில் பல, உலகிலேயே மிகக் குறைந்த கார்ப்பரேட் வரி விகிதங்களில் சிலவற்றை விதித்துள்ளன.

    இதற்கான காரணங்களாக, அதிக தொழிலாளர் ஊதியம் மற்றும் அதிகரிக்கும் இருப்பிடச் செலவுகளை அந்நாடு கூறி வருகிறது. இந்த புதிய துணை வரிவிதிப்பின் மூலம், முதல் ஆண்டில் மட்டுமே வருவாய் 1 பில்லியன் முதல் 2.5 பில்லியன் பிராங்குகள் வரை இருக்கும் என்று சுவிஸ் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

    சர்வதேச நிறுவனங்களை தொடர்ந்து ஈர்ப்பதற்கு மேலும் முயற்சிகள் தேவைப்படும் என பெர்ன் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தை ஒரு கவர்ச்சிகரமான வணிக பிரதேசமாக மாற்ற கூடுதல் வரி வருமானத்தில் ஒரு பகுதியை பயன்படுத்துவதற்கும் அது முன்மொழிந்துள்ளது.

    • ஜெனீவா ஓபன் டென்னிசில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் ஜாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெனீவா:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.

    இதில் அதிரடியாக ஆடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

    நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
    • ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட்டது.

    ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ்(டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

    டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இந்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) ஏலம் போனது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • பி.வி.சிந்து முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    பாசெல்:

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஸ்டாடில்மென்னை சந்தித்தார்.

    இதில் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) தோல்வியடைந்தார்.

    • சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது
    • கொரோனா தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது

    இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    கொரோனாவின் ஆரம்ப காலத்தில் வுகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான் தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். இந்தத் தரவுகள் 3 ஆண்டுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

    • ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறையாகும்
    • இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏப்ரல் 18ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட உள்ளதாக, கொல்லர் என்ற ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த எலும்புக்கூடு 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கு (சுமார் ரூ.70 கோடி வரை) ஏலம் போகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் இந்தியா பற்றி தவறாகப் பேசியது.
    • பாகிஸ்தானின் இந்த செய்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சீமா புஜானி பேசுகையில், பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்தை செய்வதற்கு மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடம் கொடுத்துள்ள தனித்துவமான வேறுபாட்டைத்தான் பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.வால் தடை செய்யப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகேதான் வாழ்ந்தார். சர்வதேச பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை பல்லாண்டு காலமாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள்தான் வளர்த்து விட்டன. புகலிடமும் தந்துள்ளன என தெரிவித்தார்.

    ×