என் மலர்tooltip icon

    உலகம்

    • அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர்.

    விடுமுறையை உற்சாமாக கழிக்க ஹோட்டலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தாய்லாந்தில் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் நபர் காலை விடிந்ததும் சூரிய வெளிச்சத்தை காண அறையின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஒரு பெரிய பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து செல்வதை கண்டார். மேலும் அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.

    இதுதொடர்பான வீடியோவை அவர், 'தாய்லாந்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது' என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, என் கைகள் நடுங்குகின்றன. நான் இப்போதுதான் விழித்தெழுந்து ஹோட்டல் திரைச்சீலைகளைத் திறந்தேன், இதோ பாருங்க, கதவுக்கு வெளியே ஒரு பெரிய பாம்பு இருக்கு, அந்தப் புதருக்குள் இன்னொன்று... அங்கே இன்னொன்று இருக்கு... இனி ஒருபோதும் வெளியே செல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர். முதலில் அந்த பாம்பு ராஜநாக இனத்தை சேர்ந்தது என்பதை உறுதி பட கூறிய பயனர்கள், அறை கழிப்பறை மற்றும் படுக்கையறையில் வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள் என்றும், அமைதியாக இருங்கள், ராஜ நாகப்பாம்புகளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவை ஒன்றும் செய்யாது என்றும் அறிவுறுத்தினர்.



    • ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை.
    • கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.

    பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.

    சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார்.

    இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத்  தாண்டியது.

    களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.

    உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ பணம் சம்பாதித்து வருகிறார்.

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    லெப்ரான் ஜேம்ஸ்

    • இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
    • இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.

    சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.

    ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார். 

    • வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது
    • ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை

    அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது. வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது" என்று பேசினார்.

    மேலும் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

    சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தாற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில் இந்தியா வரியை மொத்தமாக நீக்க சம்மதித்துள்ளது என்று டிரம்ப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 

    • நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.
    • அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதனை தொடர்ந்து அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதற்குள் 21 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கிலித் தொடர் விபத்தால் நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    • துபாயில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.
    • அந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

    துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

    சுமார் 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.

    இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, துபாயில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துபாயில் வந்துள்ளதை முன்னிட்டு, புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது.

    • நிரவ் மோடி 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிரவ் மோடி தாக்கல் செய்த 10வது மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனி விமானம் மூலம் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளார்.

    அங்கு, சர்வதேச விமான நிலையத்தில் டிரம்பிற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.

    முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

    பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

    தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாகிஸ்தான் அணுஆயுதம் குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும்- ராஜ்நாத் சிங்.
    • பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை தெரிவித்துள்ளார்- பாகிஸ்தான்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலடியும் கொடுத்தது.

    பின்னர் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடரந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்குள்ள பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தார். அப்போது மோசமான நாட்டில் அணுஆயுதம் பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் பாகிஸ்தானின் அணுஆயுதங்களை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் ஷஃப்காத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா சுயமாக கூறும் "அணுஆயுத மிரட்டல்" இல்லாமலேயே, அவர்களை தடுப்பதற்கான போதுமான திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. அணு ஆயுதம் குறித்த கருத்து, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி உள்ளிட்ட ஐ.நா. சிறப்பு அமைப்புகளின் ஆணை மற்றும் பொறுப்புகள் பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
    • இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறுகிறது. போர் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது பிரதிநிதிகள் துருக்கி சென்றுள்ளனர்.

    அதன்படி துருக்கியில் இன்று நடைபெறும் ரஷியா-உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்கவில்லை. அவர் தனது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ரஷியா சார்பில் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மிக்கேல் காலுஜின், பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், ரஷியா ராணுவ உளவுத்துறை தலைவர் இகோர் கோஸ்யுகோவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.
    • இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது.

    அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்.

    இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன்படி, 14 பேரை இழந்த மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் உயிரிழந்தவர்களின் (தீவிரவாதிகள்) வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவுடனான அதன் பாரம்பரிய கூட்டணியிலிருந்து வேறுபட்டு செயல்படுகிறது
    • வடகிழக்கு மாநிலங்கள் 'ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன

    வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    நேபாள துணை சபாநாயகருடனான சந்திப்பின் போது, வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திட்டத்தின் அவசியத்தை அவர் குறிப்பிட்டார். இது விவாதப் பொருளாக மாறியது.  

    நேபாளத்தைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதியுடனான சந்திப்பின் போது, நீர் மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து முகமது யூனுஸ் பேசினார்.

    இந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தக் கருத்துக்கள், யூனுஸ் தலைமையிலான வங்கதேசம், இந்தியாவுடனான அதன் பாரம்பரிய கூட்டணியிலிருந்து வேறுபட்டு செயல்படுகிறது என்ற வாதங்களை மேலும் வலுப்படுத்தின.

    சமீபத்தில் சீனாவில் முகமது யூனுஸ் பேசுகையில், "இந்தியவாவில் வடகிழக்கு மாநிலங்கள் 'ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன. அவை வங்காளதேசத்துடன் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவற்றுக்கு கடல் அணுகல் இல்லை. இந்தப் பிராந்தியத்தில் நாம் கடலுக்கான நுழைவாயிலாக இருக்கிறோம். சீனா தனது வியாபார வழிகளை விரிவுபடுத்த இது நல்ல சந்தர்ப்பம்" என்று பேசியிருந்தார். 

    ×