என் மலர்
உலகம்
- கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
- அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் தங்கள் தந்தைக்கு மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர்.
தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், "அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசுகையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.
ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்" என்று கூறினர்.
- துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும்.
- பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பாராட்டி எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எர்டோகன் தனது அறிக்கையில், "எனது அன்பு நண்பர் ஷேபாஸ் ஷெரீப் அவர்களே, துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய உறவை பேணுகின்றன. துருக்கியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புவது போல, பாகிஸ்தானிலும் அதை விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
சர்ச்சைகளைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையைப் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் "கடந்த காலங்களில் நல்ல மற்றும் கெட்ட காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் நின்றது போல, எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம். பாகிஸ்தான்-துருக்கி நட்புறவு நீடூழி வாழ்க!" என்று எர்டோகன் தெரிவித்தார்.
- மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
- கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார்.
கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.
அனிதா ஆனந்த் கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார்.
- மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தாம் பயன்படுத்தலாம்.
- கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியா பயனப்டுத்துகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை முடக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்குப் பகுதி நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீரை இந்தியாவும், மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம்.
ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு. பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது படிப்படியாக முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறினார்.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நதி நீர் ஒப்பந்தம் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானில் நெருக்கடியை உருவாக்கும் என்று பாகிஸ்தான் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலிள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்து, காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பிணைக்கைதியான இஸ்ரேல்வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்.
இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர் என காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
ரியாத்:
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.
இதில் அதிபர் டிரம்ப் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.
சிரியா மீதான தடைகளை நீக்க சவுதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை டிரம்ப் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரீஸ் தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உண்டானது.
- நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கிரீஸ் நாட்டு தீவான காசோசில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள்.
முதற்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. கிரீஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
- இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது.
ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறியது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் உறுதியாக கூறவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின் படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்களில் வலுவான செயல்திறன் காரணமாக அந்நிறுவனம் வலுவாக உள்ளது.
இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது. 2022 ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில்நுட்பத்துறை பெரும் பாதிப்படைந்தது. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
- நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையில், காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை அக்டோபர் 2024 இல் அதன் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மக்கள் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் தீர்ந்து போயுள்ளன. சில இடங்களில், வரும் வாரங்களில் அது முடிந்துவிடும். அனைத்து மக்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். காசாவில் 50 லட்சம் மக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று IPC அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

காசாவில் உள்ள உதவிப் பணியாளர்கள், சமீபத்திய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கிடங்குகள் காலியாக இருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மனிதாபிமானக் குழுக்கள் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஒரு ரேஷனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காசாவில் உள்ள யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கிரிக்ஸ் பேசுகையில், 'போர் நிறுத்த காலத்தில் நாங்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்களின் அளவு மிகக் குறைவு. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 11,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினார்.

காசா பஞ்சத்தின் உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் எச்சரித்துள்ளது.
மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த முற்றுகையின் நோக்கம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியது. இதில் பத்திரிகையாளர் ஹசன் இஸ்லா உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர்.
- போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஹமீத் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
- ஹமீதுக்கு நாட்டை விட்டு வெளியேற உதவியவர்களும், அவருடன் ஒத்துழைத்தவர்களும் தேடப்படுகின்றனர்.
வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
டாக்கா போஸ்ட்'டின் படி, ஹமீத் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு தனது மனைவி, சகோதரர் மற்றும் மைத்துனருடன் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினார்.
ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அதிபராக இருந்தவர் தப்பிக்கும்போது வெறும் லுங்கி மட்டும் அணிந்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தப்பிச் செல்வது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஹமீத் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
81 வயதான முகமது அப்துல் ஹமீது, 2013 முதல் 2023 வரை வங்கதேசத்தின் அதிபராக இருந்தார்.
ஹமீத் தப்பியது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஹமீதுக்கு நாட்டை விட்டு வெளியேற உதவியவர்களும், அவருடன் ஒத்துழைத்தவர்களும் பிடிபடாவிட்டால், தான் பதவி விலகுவதாக உள்துறை ஆலோசகர் முகமது ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக்கைத் தடை செய்த பிறகு ஹமீத் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாயாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம்.
- மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்.
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
அப்போது "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது" என்று அவர் கூறினார். ஏற்கனவே 2 முறை டிரம்ப் இவ்வாறு பேசியது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபற்றி பேசிய டிரம்ப், "நாம் வர்த்தகம் செய்வோம் என்று நான் சொன்னேன். இரு நாடுகளிலும் வலுவான, செல்வாக்கு மிக்க புத்திசாலி தலைவர்கள் உள்ளனர்.
எல்லாம் நின்றுவிட்டது, நிலைமை அமைதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம். அவர்கள் ஏவுகணைகளுக்குப் பதிலாக பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும். பதற்றம் மேலும் அதிகரித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வர்த்தகத்தில் கை வைப்பேன் என்று மிரட்டி டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
- ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.
- அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன்.
மத்திய கிழக்குக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டுள்ள உள்ள நிலையில் கத்தார் அரச குடும்பத்தினரிடமிருந்து ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.
இந்த விமானம் பாதுகாப்பு அச்சுறுதல்களைக் கொண்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் டிரம்ப் அதை நிராகரித்துள்ளார்.
இந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதை அவர் நியாயப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இலவசமாக இருக்கும்போது வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாளா?" அவர் தெரிவித்தார்.
பதவிக்காலம் முடிந்ததும் அவர் இந்த விமானத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்காலத்தில் இந்த விமானம் அதிபர் நூலக அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறினார்.






