என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா அதிபர்"

    • வெள்ளை மாளிகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பானது நடைபெற்றது.
    • வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சிரியா அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். சிரியா அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தது இதுவே முதல்முறையாகும்.

    வெள்ளை மாளிகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பானது நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, சிரியா அதிபருக்கு வாசனை திரவியத்தை அதிபர் டிரம்ப் பரிசளித்தார்.

    அப்போது, "இது ஆண்களுக்கான வாசனை திரவியம், இதோ," என்று டிரம்ப் சிரியா அதிபரிடம் கூறினார். மேலும் அவர் அந்த வாசனை திரவியத்தை சிரியா அதிபர் மீது தெளித்து, "இது மிகச் சிறந்த வாசனை திரவியம்" என்று கூறினார். பின்னர் அவர், "மற்ற வாசனை திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?" என்று டிரம்ப் கேட்க, அவரும் ஒன்றே ஒன்று தான் என பதிலளித்ததால் உலகத் தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

    இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.

    ரியாத்:

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டார்.

    இதில் அதிபர் டிரம்ப் பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.

    சிரியா மீதான தடைகளை நீக்க சவுதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை டிரம்ப் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #SyriaPresident #Assad #NorthKorea
    பியாங்காங்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஷர் அல்-ஆசாத், ‘நான் வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச இருக்கிறேன்’ என கடந்த 30-ந் தேதி கூறியதாக வடகொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பஷர் அல்-ஆசாத், எந்த தேதியில் வடகொரியா செல்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.



    கிம், வடகொரியாவின் தலைவராக பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரை எந்த ஒரு அதிபரும் வடகொரியாவுக்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது கிடையாது. அந்தவகையில், வடகொரியாவில் கிம் ஜாங் அன்னை சந்திக்கும் முதல் அதிபர் என்கிற பெயரை பஷர் அல்-ஆசாத் பெறுகிறார்.  #SyriaPresident #Assad #NorthKorea 
    ×