search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு
    X
    துப்பாக்கி சூடு

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 3 பொதுமக்கள் பலி

    மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார். இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மேரிலாண்டில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார்.

    இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய வால்பரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும் போது, ‘அந்த வாலிபர் நீண்ட நாட்களாக சித்த பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். அடிக்கடி அண்டை வீட்டாரிடம் ஆக்ரோசமாக நடந்து கொள்வார்’ என்று தெரிவித்தார்.

    நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு சிலரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் பொது மக்கள் அலறியடுத்து ஓடினர். பின்னர் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

    இதேபோல் தெற்கு புளோ ரிடாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.

    இதனால் பொது மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×