என் மலர்tooltip icon

    உலகம்

    • நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.
    • தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியுள்ளது.

    இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.

    தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெற்றோர் தெறித்து ஓடும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.

    தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நிலையில், கப்பலில் இருந்து குதித்தவர்களையும் சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.
    • இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.."

    அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.

    கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.

    அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதையடுத்து, Astronomer நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் தலைவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சமீபத்தில், அந்தத் தரம் பூர்த்தி செய்யப்படவில்லை" என்று தெரிவித்தது.

    சர்ச்சையை அடுத்து, தனது பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளார். ஆண்டி பைரனின் ராஜினாமா கடிதத்தை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

    இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால CEO ஆக செயல்படுவார் என்றும் Astronomer அறிவித்துள்ளது.  

    • கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.
    • இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீசின் தலைமுறையில் வந்த கொள்ளு பேரன் ஆவார்.

    இவர் கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 15 ஆகும். கோமா நிலையில் அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தார். இதனால் அவர் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் சவுத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.

    இளவரசரின் இறுதிச் சடங்குகள் ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் வென்டிலேட்டரை அகற்ற அரச குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது மகனுக்கு சுயநினைவு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.

    • சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.
    • இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்தியாவுக்கு மற்றொரு பின்னடைவாக சீனா, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.

    அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி திபெத்தில் யார்லுங் சாங்போ என்றும் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

    நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.

    பொருளாதார ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.

    இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும்.

    இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும் என்றும், மொத்த முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த அணைத் திட்டம் குறித்து இந்தியா சீனாவிடம் கடந்த ஜனவரியில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஆகும்.
    • அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

    ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஆனால் பின்னர் அதை வாபஸ் பெற்றது.

    இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் TRF அமைப்புக்கு தொடர்பில்லை.. இந்தியாவிடம் ஆதாரம் கேட்டும் பாகிஸ்தான் ஈடுபட்டதாக இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் மறுத்துள்ளார்.

    TRF சம்பந்தப்பட்டிருந்தால் ஆதாரங்களைக் காட்டுமாறு அவர் இந்தியாவுக்கு சவால் விடுத்தார்.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய டார், TRF ஒரு சட்டவிரோத அமைப்பாகக் கருதப்படவில்லை என்றும், தாக்குதலில் TRF ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.
    • அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள்.

    நேற்று (ஜூலை 19) ஒரே நாளில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 37 பேர் ராஃபாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டனர்.

    இதன்மூலம் காசா போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,765 ஐ எட்டியுள்ளது. 1,40,485 பேர் காயமடைந்தனர்.

    மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

    அங்கு உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.

    ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.

    இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை எழுதினர். அக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் தேர்வுகள் நடதப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை தேர்வு எழுதியதாக தெரிகிறது.

    காசா கல்வித் துறை இந்தத் தேர்வு சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

    பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படி இந்த தேர்வு. இணையம் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் தேர்வை எழுதினர்.  

    • டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்தது.
    • விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது.

    அமெரிக்காவில் நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி டெல்டா ஏர் லைன்ஸ் உடைய போயிங் 767-400 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.

    ஆனால் டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.

    விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்டா விமானத்தில் எஞ்சின் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

    • கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும்.
    • அந்த நகரின் அழகை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும். அந்த நகரின் அழகைக் கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்காக அங்கு ஏராளமான ஓட்டல்களும் புதிது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் அருகில் இருந்த ஏரியில் கலப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் புதிதாக ஓட்டல் கட்டுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    • வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் கடலில் மூழ்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹா லாங் வளைகுடா பகுதிக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹா லாங் கடலோர பகுதியில் திடீரென சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மீட்புக் குழுவினர் கூறுகையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    • ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
    • பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    ஈரானின் ஷிராஸ் நகரில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழநதனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.

    ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த விபத்து இன்று (ஜூலை 19) காலை 11:05 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 55 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதி இருக்கிறது.
    • 3 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

    அமெரிக்காவில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

    கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதி இருக்கிறது. இங்கு உள்ளுர் நேரப்படி அதிகாலையில்  நுழைய வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது அந்த சாலையில் வந்த கார் ஒன்று மோதியது.

    கூட்டத்தில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். காயமடைந்தவர்கள் ஆரம்ப சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

    ஓட்டுநர் சுயநினைவை இழந்து காரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒடேசாவில் 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
    • உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்தது.

    இன்று காலை உக்ரைன் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது.

    கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில் 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும் ஒடேசா மேயர் ஹென்னாடி ட்ருக்கானோவ் தெரிவித்துள்ளார்.

    ஒடேசா தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்ததாகவும், உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அதிபர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    ×