என் மலர்
உலகம்
- திடீரென தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
- மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவல்பிண்டியில் வெள்ளம் குறித்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது. நிருபர் கையில் மைக் உடன் கழுத்தளவு தண்ணீரில் இருந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் நிலை குறித்த தகவல்கள் இல்லை.
TRP-க்காக ஊடகங்கள் இரக்கமற்ற முறையில் நிருபர்களின் உயிரை பணயம் வைத்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாகிஸ்தானில் பரவலான சேதம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 116 பேர் இறந்துள்ளனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் 37 பேரும், சிந்துவில் 18 பேரும், பலுசிஸ்தானில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ராவல்பிண்டி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
- 130 கி.மீ. தொலைவில் டாசோ அமைந்துள்ளது.
- நைஜர் இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் டாசோ அமைந்துள்ளது.
இங்கு கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ராணுவ வீரர்கள் மீது கடந்த 15-ந்தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
ராணுவ வீரர்களும் பதிலுக்கு தாக்கினர். அப்போது மோதலுக்கிடையில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து நைஜர் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். நைஜரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
- கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தங்களுடைய வான்வெளியில் பறக்க இந்திய விமானங்களுக்கு தடைவிதித்தது.
- அந்த தடையை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
இந்த நிலையில் தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வருகிற 24ஆம் தேதி வரை அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஏப்ரல் 24ஆம் தேதி அவர்களின் வான்வெளியை பயன்படுத் தடைவிதித்தது.
- ஒரு பெண்ணின் நிர்வாண அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரில் டிரம்ப் வாழ்த்து கடிதம் டைப் செய்ததாக செய்தி வெளியீடு.
- தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது என டிரம்ப் குற்றச்சாட்டு.
அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் அதிபர் டிரம்பின் பெயர் இருப்பதாக அண்மையில் எலான் மஸ்க் புயலை கிளப்பியிருந்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் எப்ஸ்டீனுக்கு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக, கடிதம் ஒன்றை முன்னணி அமெரிக்க நாளிதழான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல், 2003-ல் எப்ஸ்டீன் பிறந்தநாளுக்காக, பலரிடம் இருந்து வாழ்த்து கடிதங்களைப் பெற்று ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார். அதில் டிரம்ப்பின் கடிதமும் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண்ணின் நிர்வாண அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரில் டிரம்ப் வாழ்த்து கடிதத்தை டைப் செய்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் டிரம்ப் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது.
அது என்னுடைய வார்த்தைகள் அல்ல. நான் அப்படி பேசவும் மாட்டேன். நான் வரைந்ததே கிடையாது. நான் ரூபர்ட் முர்டோக்கிடம் இப்படி போலி கதைகளை அச்சிடக் கூடாது என்று கூறினேன். ஆனால், அவர் அதை செய்துள்ளார். அவர் மீதும், மூன்றாம் தர செய்தித்தாள் மீதும் வழக்கு தொடர போகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது 10 பில்லியன் மானநஷ்டஈடு கேட்டு டொனால்டு டிரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் சண்டையை வர்த்தகம் மூலமாக நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
- இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியாவின் முப்படைகள் துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா சிறப்பான வகையில் தடுத்து நிறுத்தியது. 3 நாட்களுக்கு மேலாக சண்டை நீடித்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனால், டொனால்டு டிரம்ப் தன்னுடைய முயற்சியால்தான் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், வர்த்தகம் மூலமாக நான்தான் சண்டையை நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான்தான் நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் (அமெரிக்கா) ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையிலேயே 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.
இரண்டும் தீவிர அணுசக்தி நாடு. இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். அது ஒரு புது வடிவிலான போர் போன்றது என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் ஈரானில் நாங்கள் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை முன்னும், பின்னுமாக சென்று கொண்டிருந்தது. மிகவும் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வர்த்தகம் மூலம் அதை தடுத்து நிறுத்தினோம். நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.
மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளாக நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறினோம்.
இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை முதலில் இந்தியா மறுத்தது. பின்னர் இந்திய ராணுவ அதிகாரி இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் 5 விமானங்கள் என்பதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.
- கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என்றார்.
ஹவானா:
தீவு நாடான கியூபாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் அங்கு மேலும் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
இந்நிலையில், அங்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.
அதாவது, பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார்.
அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
- ஈர்ப்பு விசைக்கு எதிராக கால்களில் இருந்து ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் மேல்நோக்கி செல்லும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு அறிவயவகை நரம்பு சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
79 வயதான டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றார்.
இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் வைரலானது.
இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் காயம் காணப்பட்டது
இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரத்த நாள சோதனை உள்பட விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது. தீவிரமான நரம்பு பிரச்னை எதுவும் இல்லை, அனைத்து பரிசோதனை முடிவுகளும் பாசிட்டிவாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்புக்கு இதய செயலிழப்பு, சிறுநீரகப் பிரச்சனை அல்லது வேறெந்த நோய்க்கான அறிகுறியும் இல்லை என்றும் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை மருத்துவர் தெளிவுபடுத்தினார்.
ஈர்ப்பு விசைக்கு எதிராக கால்களில் இருந்து ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் மேல்நோக்கி செல்லும். நாள்பட்ட சிரை குறைபாடு உள்ளவர்களுக்கு இது சரியாக செல்லாமல், மூட்டுப் பகுதிகளில் ரத்தம் தேங்கி வீக்கமடையும். இது வயதானவர்களுக்கு வரும் பொதுவான பிரச்னை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.
- கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார். கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.
அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறினார்.
- ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
தாய்லாந்தில், புத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்து, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியபோது காவல்துறை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியது.
`மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியது தெரியவந்தது. இதேபோல் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
Ms Golf வீட்டை சோதனை செய்தபோது, 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது.
- 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது.
- அச்சிடக் கூடாது என்று கூறினேன். ஆனால், அவர் அதை செய்துள்ளார்
அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் அதிபர் டிரம்பின் பெயர் இருப்பதாக அண்மையில் எலான் மஸ்க் புயலை கிளப்பியிருந்தார்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் எப்ஸ்டீனுக்கு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கடிதம் வெளியாகி உள்ளது. முன்னணி அமெரிக்க நாளிதழான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல், 2003இல் எப்ஸ்டீன் பிறந்தநாளுக்காக, பலரிடம் இருந்து வாழ்த்து கடிதங்களைப் பெற்று ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார்.
அதில் டிரம்ப்பின் கடிதமும் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண்ணின் நிர்வாண அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரில் டிரம்ப் வாழ்த்து கடிதத்தை டைப் செய்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் டிரம்ப் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது.
அது என்னுடைய வார்த்தைகள் அல்ல. நான் அப்படி பேசவும் மாட்டேன். நான் வரைந்ததே கிடையாது. நான் ரூபர்ட் முர்டோக்கிடம் இப்படி போலி கதைகளை அச்சிடக் கூடாது என்று கூறினேன். ஆனால், அவர் அதை செய்துள்ளார். அவர் மீதும், மூன்றாம் தர செய்தித்தாள் மீதும் வழக்கு தொடர போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் 1990-களில் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருந்ததாலும், ஒன்றாக விருந்துகளில் கலந்துகொண்டதாலும், டிரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.

யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷியா முன்வரவில்லை.
- பொருளாதார தடைவிதித்து ரஷியாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்க திட்டம்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பலமுறை பொருளாதார தடைவிதித்த நிலையிலும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் ரஷியா போர் நிறுத்தம் செய்ய முன்வரவில்லை.
இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். கடுமையான பொருளாதார தடைவிதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஷியாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்த கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு, நார்ட் ஸ்ட்ரீம் கியாஸ் பைப்லைன்ஸ் மாற்றம் தடை, நிழல் கடற்படை கப்பல்களை குறிவைப்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பா உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கியது. இந்த தகவல் மிகவும் தெளிவானது. ரஷியா போரை முடிக்கும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
- கடந்த வருடம் 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது.
- அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் ஜூலை மாதத்தில் 5 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு திட்டம், நிதி இழப்பை சரி செய்தல் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, ஒரேகான், அரிசோனா, டெக்சாஸ் மாகாணங்களில் வேலைப் பார்க்கும் பொறியாளர்கள், மூத்த தலைவர்கள் (Senior Leaders), அலுவலக ஸ்டாஃப்கள் வேலை இழப்பை சந்திக்க இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் தற்போது 5 ஆயிரம் பேரை நீக்குகிறது.
ஒரேகான் அலுவலகத்தில் இருந்து மட்டும் 2,392 பேரை நீக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக 500 பேரை நீக்க திட்டமிட்ட நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கலிபோர்னியா அலுவலகத்தில் 1,935 பேரை நீக்குகிறது.
சிப் டிசைன், கிளவுட் சாஃப்ட்வேர் (Cloud Software), யுனிட் தயாரிப்பு பிரிவில் உள்ள பொறியாளர்கள் இந்த வேலை நீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.






