என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கிளாம்பாக்கம் பேருந்து முனையம்- ரெயில் நிலையம் இடையே மேம்பாலம்.
    • மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    சென்னை நகரில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்- ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் இடையே புறநகர் ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது "நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும். மக்களின் ஆட்சேபனையை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

    • பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தார்.
    • மாணவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த ள்ளி மாணவன், தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இச்சம்பவத்தில்,உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலையையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
    • நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிமன்றம் "கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.

    நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்" என கருத்து தெரிவித்தது.

    அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    • பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.
    • வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்தார்.

    நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் கூட்டணி குறித்து நேரமும் காலமும் வரும்போது பாஜக அறிவிக்கும். வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என அண்ணன் இபிஎஸ் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார். 

    • நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
    • ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

     உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஆயுதப்படை கான்ஸ்டபிள் (PAC) ஒருவர் பணிக்கு தாமதமாக வந்த்தற்கு கொடுத்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மீரட்டில் பிப்ரவரி 17 அன்று பணியில் அலட்சியம் காட்டியதற்காக PAC கான்ஸ்டபிளுக்கு பட்டாலியன் பொறுப்பாளர் தல்நாயக் மதுசூதன் சர்மா ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.

    பிப்ரவரி 16 அன்று காலை கான்ஸ்டபிள் தாமதமாக வந்ததாகவும், அடிக்கடி யூனிட் செயல்பாடுகளைத் தவறவிட்டதாகவும், இது கடுமையான ஒழுக்க மீறல் என்றும் நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நோட்டீஸுக்கு பதில் கடிதம் எழுதிய கான்ஸ்டபிள், "என் மனைவி என் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் என் இரத்தத்தைக் குடிக்க முயற்சிப்பது போல் தினமும் இரவு கனவு வருகிறது. எனவே இரவில் தூங்க முடியவில்லை"

    இதனால் வேலைக்கு வர தாமதமாகிவிட்டதாக தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், அவரது தாயார் நரம்பு கோளாறால் அவதிப்படுவதாகவும், இது அவரது துயரத்தை அதிகப்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கடிதத்தின் முடிவில் உணர்ச்சிவசப்பட்ட கான்ஸ்டபிள், நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.

    எனவே ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கடிதம் சமூக ஊடக தளங்களில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.  

    • டெல்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாக உள்ளது.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகரில் உள்ள ஜிடிபி மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேகா குப்தா, "டெல்லி அரசு நடத்தும் பல மருத்துவமனைகளின் கிடங்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் அப்பொருட்கள் உள்ளன. ஆம் ஆத்மி அரசு நமக்கு விட்டுச் சென்றது இதுதான்" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும் பேசிய அவர், "கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த மருத்துவமனை கிடங்கில் உள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இன்றும் கூட, 458 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 146 வென்டிலேட்டர்கள், 36,000 பிபிஇ கருவிகள், மல்டிபாரா மானிட்டர்கள், முகமூடிகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

    இது ஜிடிபி மருத்துவமனையில் மட்டுமல்ல, டெல்லி முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் உள்ளது.

    டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாகவும், உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. "இதற்கு யார் பொறுப்பு? மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சிப்போம்

    • நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் கர்நாடக அரசு சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே.

    கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டெண்டர்களில் பட்டியல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வரும் அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில்  சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், மாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.

    பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும், இது திருப்திப்படுத்தும் அரசியல். எஸ்சி மற்றும் எஸ்டிக்கு இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் கர்நாடகாவில் வளர்ச்சி என்ன? காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. பாஜக இதை அவையில் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

    • அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இளையராஜாவை சந்தித்தது குறித்து இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், "வேலியன்ட்" எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே இளையராஜாவை சந்தித்தது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி அய்யா இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.

    • மூன்று பேரை காதலித்து வந்த நிலையில், முதல் காதலி திருமணம் செய்ய வற்புறுத்தல்.
    • தன்னைவிட வயது அதிகம் என்பதால் வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கொலை செய்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விநாயகர் தெருவை சேர்ந்தவர் லோகநாயகி (31). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுவர்ணபுரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை.

    இதையடுத்து அவரது தோழிகள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாயமான இளம்பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி வந்த தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    காணாமல் போன லோகநாயகி ஒரு வாலிபரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் லோகநாயகி தன்னிடம் கடைசியாக ஏற்காட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். மற்றப்படி எனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் லோகநாயகி குறித்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதனைத்தொடர்ந்து அப்துல் ஹபீஸ் என்ற அந்த வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ள லோகநாயகியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார்.

    லோகநாயகி என்பவரை அப்துல் ஹபீஸ் காதலித்து வந்ததுள்ளார். அதேவேளையிலா் அப்தல் ஹபீஸ் மேலும் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.

    லோகநாயகி தன்னை திருமணம் செய்து கொள்ள அப்துல் ஹபீஸை வற்புறுத்தியுள்ளார். லோகநாயகிக்கு தன்னை விட வயது அதிகம் என்பதால் அப்துல் ஹபீஸ் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. லோகநாயகி தொடரந்து வற்புறுத்தியதால், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது இரண்டு காதலிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

    அவர்கள் உதவியுடன் விஷ ஊசி செலுத்தில் லோகநாயகியை கொலை செய்த அப்துல் ஹபீஸ், உடலை ஏற்காடு மலைப்பகுதியில் கொண்டு சென்று வீசியுள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் அழுகிய நிலையில் லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அப்துல் ஹபீஸ் மற்றும் அவரது இரண்டு காதலிகள் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து ஏற்காட்டு மலைப்பாதையில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு உள்ளூர்வாசிகள் தகுந்த சோதனைக்குப் பின்னர் உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    • ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 108 ரன்கள் விளாசினார்.
    • கேன் வில்லியம்சன் 91 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.

    என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடினர். கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் கடக்க, ரச்சின் ரவீந்திரா 93 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து 32 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.

    நியூசிலாந்தின் ஸ்கோர் 33.3 ஓவரில் 212 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ரன்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.

    3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். ரச்சின் ரவீந்திராவை தொடர்ந்து கேன் வில்லியம்சனும் சதம் விளாசினார். அவர் 91 பந்தில் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் 94 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 39.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த டாம் லாதம் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. இதனால் நியூசிலாந்து 45.3 ஓவரில் 300 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 28 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது.

    37 பந்தில் 49 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் ஆட்டமிழந்தார். இதற்கிடையே யான்சன் வீசிய ஆட்டத்தின் 46-வது ஓவரில் கிளென் பிலிபஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகள் விளாசினார்.

    48-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் பிலிப்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச நியூசிலாந்து 19 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து 48 ஓவரில் 343 ரன்கள் சேர்த்தது.

    49-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் நியூசிலாந்து 49 ஓவரில் 349 ரன்கள் எடுத்தது.

    கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன் அடிக்க நியூசிலாந்து 350 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பிரேஸ்வெல் 12 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை சான்ட்னெர் எதிர்கொண்டார். இந்த பந்தில் 2 ரன் அடிக்க நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ் 27 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 363 என்ற இமாலய ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் யான்சன் 79 ரன்களும், நிகிடி 72 ரன்களும், ரபாடா 70 ரன்களும், மகாராஜ் 65 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    • எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 



     


    • உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.
    • சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார்

    ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர் 27 வயதான சச்சின். கடந்த சனிக்கிழமை அன்று இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.

    ஓட்டல் ஊழியர் அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.

    இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    சச்சின் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. சமீப காலங்களாக இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது. 

    ×