என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
லக்னோ:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் 2022, டிசம்பர் 17ல் நடந்த கூட்டத்தில் பேசியபோது வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினர். டேரில் மிட்சல், கிளென் பிலிப்ஸ் 49 ரன்கள் எடுத்தனர்.
2வது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்து சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.
- இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் மோதின.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.
இப்போட்டியில் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வேகமாக ஓடி ரன் எடுப்பதற்காக ஓட்ட பந்தய வீரர் போல பிலிப்ஸ் தயார் நிலையில் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
- இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
- அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துவரும் எம்எல்ஏ அபு ஆஸ்மி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார்.
ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.
இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொந்தளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல்நிலையங்களில் அபு அஸ்மி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று தொடங்கிய மகாராஷ்டிர சட்டமன்றக் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அபு அஸ்மி பிரச்சனையை எழுப்பினர்.
அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு ஆஸ்மியை அவையில் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டு முழு கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார். அபு அஸ்மி கருத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் (மார்ச் 07) வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையம்- ரெயில் நிலையம் இடையே மேம்பாலம்.
- மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
சென்னை நகரில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்- ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் இடையே புறநகர் ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது "நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும். மக்களின் ஆட்சேபனையை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
- பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தார்.
- மாணவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த ள்ளி மாணவன், தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில்,உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலையையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
- நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதிமன்றம் "கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்" என கருத்து தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.
- வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்தார்.
நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் கூட்டணி குறித்து நேரமும் காலமும் வரும்போது பாஜக அறிவிக்கும். வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும் என அண்ணன் இபிஎஸ் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.
- நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
- ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஆயுதப்படை கான்ஸ்டபிள் (PAC) ஒருவர் பணிக்கு தாமதமாக வந்த்தற்கு கொடுத்த விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மீரட்டில் பிப்ரவரி 17 அன்று பணியில் அலட்சியம் காட்டியதற்காக PAC கான்ஸ்டபிளுக்கு பட்டாலியன் பொறுப்பாளர் தல்நாயக் மதுசூதன் சர்மா ஒரு நோட்டீஸ் அனுப்பினார்.
பிப்ரவரி 16 அன்று காலை கான்ஸ்டபிள் தாமதமாக வந்ததாகவும், அடிக்கடி யூனிட் செயல்பாடுகளைத் தவறவிட்டதாகவும், இது கடுமையான ஒழுக்க மீறல் என்றும் நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நோட்டீஸுக்கு பதில் கடிதம் எழுதிய கான்ஸ்டபிள், "என் மனைவி என் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் என் இரத்தத்தைக் குடிக்க முயற்சிப்பது போல் தினமும் இரவு கனவு வருகிறது. எனவே இரவில் தூங்க முடியவில்லை"
இதனால் வேலைக்கு வர தாமதமாகிவிட்டதாக தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், அவரது தாயார் நரம்பு கோளாறால் அவதிப்படுவதாகவும், இது அவரது துயரத்தை அதிகப்படுத்தியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தின் முடிவில் உணர்ச்சிவசப்பட்ட கான்ஸ்டபிள், நான் வாழ்வதற்கான விருப்பத்தை இழந்துவிட்டடேன். கடவுளின் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
எனவே ஆன்மீக இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தனது துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் தனது மேலதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கடிதம் சமூக ஊடக தளங்களில் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
- டெல்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.
- டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாக உள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகரில் உள்ள ஜிடிபி மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேகா குப்தா, "டெல்லி அரசு நடத்தும் பல மருத்துவமனைகளின் கிடங்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் அப்பொருட்கள் உள்ளன. ஆம் ஆத்மி அரசு நமக்கு விட்டுச் சென்றது இதுதான்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இந்த மருத்துவமனை கிடங்கில் உள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இன்றும் கூட, 458 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 146 வென்டிலேட்டர்கள், 36,000 பிபிஇ கருவிகள், மல்டிபாரா மானிட்டர்கள், முகமூடிகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.
இது ஜிடிபி மருத்துவமனையில் மட்டுமல்ல, டெல்லி முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் உள்ளது.
டெல்லி அரசு மருத்துவமனைகள் பலவற்றின் நிலை மோசமாக இருப்பதாகவும், உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. "இதற்கு யார் பொறுப்பு? மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சிப்போம்
- நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் கர்நாடக அரசு சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டெண்டர்களில் பட்டியல் சாதியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வரும் அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிப்பிட்டு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், மாநிலம் முழுவதும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.
பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும், இது திருப்திப்படுத்தும் அரசியல். எஸ்சி மற்றும் எஸ்டிக்கு இடஒதுக்கீடு உள்ளது, ஆனால் கர்நாடகாவில் வளர்ச்சி என்ன? காங்கிரஸைப் பொறுத்தவரை, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. பாஜக இதை அவையில் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.






