என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glenn Phillips"

    • நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
    • சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

    சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். 106 ரன்னில் பிலிப்ஸ் அவுட்டாக மிட்செல் 137ரன்னிலும் அவுட்டானார்.

    அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்தது

    • டேரில் மிட்செல் இந்த தொடரில் 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் சதம் விளாசினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது.

    சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இருவரின் சதத்தால் நியூசிலாந்து 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பிலிப்ஸ் 88 பந்தில் 106 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங் ப்தில் ஆட்டமிழந்தார்.

    • நியூசிலாந்து கிளென் பிலிப்ஸ் தலைசிறந்த பீல்டர் ஆவார்.
    • இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டனர்.

    நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் கிளென் பிலிப்ஸ். இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டவர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் கடைசியில் இந்தியாவில் தொடங்குகிறது.

    இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வலது கை பேட்ஸ்மேன்கள் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவார்கள். இதனால் வலது கை பேட்ஸ்மேனான பிலிப்ஸ், இடது கை பேட்ஸ்மேனாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். லெஃப் ஆர்ம் ஸ்பின்னர் பந்து வீசும்போது இடது கை பேட்ஸ்மேனாக விளையாட முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக கிளென் பிலிப்ஸ் கூறியதாவது:-

    எனது இடது கை பேட்டிங் பயிற்சியை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன். உண்மையிலே, அதை பல காரத்திற்காக செய்கிறேன். முதலில் இரண்டு கைகளும், மூளையின் இரண்டு பக்கங்களும் வேலை செய்வதற்காக. ஆனால், ஒருவேளை ஏதேனும் ஒரு கட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான வாய்ப்பிற்காகவும் கூட.

    வலது, இடது என இரண்டு பக்கமும் பேட்டிங் செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது. இது எதிர்காலத்திற்கான ஒரு விசயம்.

    ஆனால், நிறைய இடது கை பந்துவீச்சு இருக்கப்போகும் ஒரு போட்டியில் அந்த வாய்ப்பு கிடைத்ததால், அதை முயற்சி செய்து பார்க்க, அந்தப் போட்டிக்கு முந்தைய பயிற்சி ஓரளவிற்குப் பொருத்தமாக இருந்தது என்று நினைக்கிறேன். மேலும், அந்தப் போட்டியின்போது அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

    பந்தை முடிந்தவரை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதை நான் முடிந்தவரை செய்துள்ளேன். அதற்கான தயார்படுத்துதலை செய்துள்ளேன். அதனால் பலனளிக்காமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை.

    இவ்வாறு கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

    • ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    வெல்லிங்டன்:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

    • நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
    • குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை என்ற ஆவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் முடிவில் முதல் 4 இடங்களில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய அணிகள் பின் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவர் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா குஜராத் அணியில் இடம் பிடித்துள்ளார்.



    அவர் தனது அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கைக்காக 102 டி20 போட்டிகளில் ஷனகா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
    • நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகிய கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான டாசன் ஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரபாடா ஏற்கனவே சொந்த காரணத்திற்கான அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
    • தற்போது காயம் காரணமாக கிளென் பிலிப்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த கிளென் பிலிப்ஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளது. இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு முன்னணி வீரர்கள் விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரபாடா ஆடும் லெவனில் இருந்தபோதிலும், கிளென் பிலிப்ஸ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

    குஜராத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடு நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த 6ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மாற்று வீரராக களம் இறங்கி பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 256 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    94 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 108.2 ஓவர்களில் 372 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரச்சின் ரவீந்தரா 82 ரன்னும், டாம்லாதப் 73 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    279 ரன் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 34 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    • 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
    • ஒல்லி போப் 77 ரன்னில் பிலீப்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கனே வில்லியம்சன் 93 ரன்னில் அவுட்டானார். பிலிப்ஸ் 41 ரன்னும், சவுதி 10 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் கடந்தார். சவுத்தி 15 ரன்னிலும் அடுத்து வந்த வில்லியம் ஓரோர்கே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பிலிப்ஸ் 58 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். சாக் கிராலி 0 ரன்னிலும் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் 0, டக்கெட் 46 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 71 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஹாரி ப்ரூக் - ஒல்லி போப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் விளாசினார். 77 ரன்னில் போப் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் சதம் அடித்து அசத்தினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 53 ஓவரை டிம் சவுத்தி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் போப் அடித்த பந்தை நியூசிலாந்து அணியின் சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸ் பாய்ந்து பிடித்தார்.

    பீல்டர் என்றால் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான் நம் நினைவுக்கு வருவதுண்டு. அவரை போலவே இவரவும் அந்தரத்தில் கேட்ச் பிடித்து கிளென் பிலிப்ஸ் அசத்தி உள்ளார் எனவும் விட்டால் அவரையே மிஞ்சி விடுவார் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார்.
    • பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. லாகூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் வில் யங் 4 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினர்.

    அதன்பின் வந்த கேன் வில்லிம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 89 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 84 பந்தில் 81 ரன்களும் சேர்த்தனர்.

    6-வது வீரரான களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாச நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. 

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.

    • 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
    • கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சால் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    விராட் கோலியின் 300-வது போட்டியை காண அவரது மனைவி அனுஷ்கா சர்மா துபாய் வந்திருந்தார். இந்நிலையில், கோலியின் விக்கெட்டை பார்த்து அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.

    இப்போட்டியின் மூலம் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலி இணைகிறார்.

    36 வயதான விராட் கோலி 300 போட்டியில் 288 இன்னிங்சில் 14,096 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 51 சதமும், 73 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் அவர் தனது 51-வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×