என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
    • இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 42% இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும். பிரதமரின் சந்திப்பதற்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை உதவி செய்ய வேண்டும்

    இந்த மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசவுள்ளேன்.

    சாதிவாரி மக்கள்தொகை குறித்த தகவல்கள் இல்லாததால், இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது, இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை உறுதி செய்வது தெலுங்கானா சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாகும்" என்று தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
    • இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.

    முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.க. கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்.

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதேபோல் இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையில் கலந்து கொள்ளவில்லை.

    நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றுள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது. மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
    • திரையரங்கில் வசூல் குவித்தும் வரும் 'டிராகன்' ஓடிடி-யிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி உலகளவில் வசூல் குவித்து வருகிறது.

    இதனிடையே, டிராகன் திரைப்படம் இந்தி மொழியில் வெளியிடப்பட்டது. தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் டிராகன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்கில் வசூல் குவித்த 'டிராகன்' ஓடிடி-யில் வெளியாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கானா துணை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • பி.ஆர்.எஸ்., பாஜக காட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.

    தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் பங்கேற்றன. பி.ஆர்.எஸ்., பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

    வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ள கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.

    • இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார்.
    • இப்படம், வருகிற 27-ந்தேதி வெளியாகிறது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். 'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார்.

    இப்படத்தில் பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார். மேலும் இப்படம், வருகிற 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'எம்புரான்' பட வெளியாவதையொட்டி நடிகர் ரஜினிகாந்தை இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'எம்புரான்' படத்தின் டிரெய்லரை முதலில் பார்த்த நபர் நீங்கள்தான் ரஜினி சார். அதை பார்த்த பிறகு நீங்கள் கூறிய வார்த்தைகள் என் வாழ்வில் எப்போதும் நினைவுகூரத்தக்கது. அது எனக்கு மிகப்பெரிய விஷயம். எப்போதும் உங்களின் ரசிகனாக! என்று கூறியுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
    • டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் அமர்வு தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.

    அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.

    சட்டசபையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் டி.கருப்புசாமிக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது.

    பல்வேறு துறைகளில் எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

    • திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
    • சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.  

    அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த  லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.

    மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.  

    • கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.
    • மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

    இதற்காக, கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய சப்ளையர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும் வெளியிட்டது.

    அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் மொத்தம் 37 பிராண்டுகள் விண்ணப்பித்தன. இவற்றில் 15 வெளிநாட்டு மதுபான பிராண்டுகள், மேலும் 15 உள்நாட்டு பிராண்டுகள், மேலும் 7 பீர் வகைகள் புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் மதுபானங்களின் அடிப்படை விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கம் ஏற்கனவே பீர் விலையை உயர்த்தியுள்ளது.

    நடப்பு பட்ஜெட்டில் கலால் துறையிலிருந்து ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ள நிலையில், அடுத்த பட்ஜெட்டில் வருவாய் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்தால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
    • இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

    போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.

    கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.

    நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8250-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400

    13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    14-03-2025- ஒரு கிராம் ரூ.112

    13-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
    • மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?

    மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:

    மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.

    எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?

    நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.

    இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.

    ×