என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற்றது.
படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
- வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர்.
வட இந்திய சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்தும் விதமாக அமைச்சர் அன்பரசன் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். ஆனால் வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர் என்று அமைச்சர் அன்பரசன் பேசியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோவை தனது எக்ள் தள பக்கத்தில் பதிர்ந்துள்ள அண்ணாமலை பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
எல்லை நிர்ணயம் குறித்த தனது மாயையான நாடகத்தை நடத்தும்போது, திமுக அமைச்சர் த.மு. அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் ஒளிபரப்புவார் என்று நம்புகிறோம்.
இது வட இந்திய சகோதர சகோதரிகளை அவமதிக்கவும் துஷ்பிரயோகம் செய்யவும் திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
- சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
- கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.
கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் தொடக்க ஜோடி 5.5 ஓவரில் 74 ரன்கள் விளாசியது.
- ஹசன் நவாஸ் 45 பந்தில் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ரன்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.

பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். அடுத்து கேப்டன் சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.
ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது. 8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைக் கடந்தது. ஹசன் நவாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 150 ரன்னையும், 15.5 ஓவரில் 200 ரன்னையும் கடந்தது. இதற்கிடையே சல்மான் ஆகா 30 பந்தில் அரைசதம் விளாசினார்.
15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹசன் நவாஸ் சதம் அடித்தார். 44 பந்தில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் (4 ஓவர்) 54 ரன்களும், பென் சியர்ஸ் (4 ஓவர்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஜேக்கப் டஃபி 3 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 2 ஓவரில் 23 ரன்களும், இஷ் சோதி 2 ஓவில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
- சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அடுத்தாக படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் இல் பெரிய திருவிழா செட் அமைத்து ஒரு பாடலை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவிழா பின்னணியில் சூர்யா மற்றும் திரிஷா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பாடலில் 500 நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மற்றும் பல கோடி செலவளித்து செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஒரு ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கின்றனர்.
படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- ஆனால் மோஹ்சின் கான், மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
கே.எல். ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ அதிக விலைக்கு ஏலம் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பேட்ஸ்மேன்கள்
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஏய்டன் மார்கிராம், ஆர்யன் ஜுயல், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன்
ஆல்ரவுண்டர்
மிட்செல் மார்ஷ், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் படோனி

பந்து வீச்சாளர்கள்
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோஹ்சின் கான், ரவி பிஷ்னோய்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
மார்கிராம், பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். இதில் பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் சில போட்டிகளில் களம் இறங்கலாம். ஒருவேளை இந்த ஜோடி ஏற்படவில்லை என்றால் மாற்றப்படலாம். மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இதனால் பேட்டிங் மட்டுமே செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் வரிசை
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமாத், மார்கிராம், ஆயுஷ் படோனி என வலுவான மிடில் ஆர்டர் வரிசையை கொண்டுள்ளது. தொடக்கம் சிறப்பாக அமைந்தால் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரன் வாணவேடிக்கையை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

வேகப்பந்து வீச்சு
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பேரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்த நான்கு பேரையும் தவிர்த்து ஷமர் ஜோசப், அர்ஷின் குல்கர்னி (ஆல்-ரவுண்டர்), பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ஆல்-ரவுண்டர்) ஆகியோர் உள்ளனர். தற்போது மோஹ்சின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் லக்னோ அணி செல்லும் என்பது ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பின்னர்தான் தெரியவரும்.

சுழற்பந்து வீச்சாளர்
ரவி பிஷ்னோய், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, ஆயுஷ் படோனி, எம். சித்தார்த், திக்வேஷ் சிங் உள்ளனர். இதனால் ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, எம். சித்தார்த் முன்னிலை வகிப்பார்கள். தேவை என்றால் மார்கிராமை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர்கள் கைக்கொடுக்கப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்லலாம்.
வெளிநாட்டு வீரர்கள்
டேவிட் மில்லர், மார்கிராம், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷமர் ஜோசப் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இவர்களில் டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்தும் தேவைப்பட்டால் மார்ஷ் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன் களம் இறங்கலாம். பிரீட்ஸ்கேவுக்குப் பதிலாக இம்பேக் பிளேயராக ஷமர் ஜோசப் சேர்க்கப்படலாம்.
அவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகப் பலமானதாக உள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது
- டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஆம் ஆத்மி பறிகொடுத்தது. தற்போது பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அவ்வாறாக டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவராக இருந்த கோபால் ராய்க்குப் பதிலாக சௌரப் பரத்வாஜ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் டெல்லி தலைமையில் இருந்த கோபால் ராய் குஜராத் ஆம் ஆத்மி மாநில தலைவராக மாற்றலானார்.
கோவாவின் பொறுப்பாளராக பங்கஜ் குப்தாவும், சத்தீஸ்கரின் பொறுப்பாளராக சந்தீப் பதக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராக மகாராஜ் மாலிக் நியமிக்கப்பட்டார்.

- நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
- கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
அப்போது, பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மேலும், " பெண்கள், சிறார்கள் விலங்கிடப்படுவதில்லை என்றாலும், நாடு கடத்தும் விமானத்திற்கு பொறுப்பான விமான அதிகாரியே இறுதி முடிவு.
கைவிலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இதுவரை மொத்தம் 388 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
- சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அவர் சென்னை அணியிடன் இணைந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை' என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது.
- உள்கட்சியில் நிலவும் பூசல்தான் காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இந்த இலக்குடன் தேர்தல் பணிகளை தி.மு.க. மேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 234 தொகுதிகளிலும் ரகசிய ஆய்வு நடந்ததாக தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இந்த ஆய்வு நடந்துள்ளது.
மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள செல்வாக்கான நபர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
ஆய்வு முடிவில் சுமார் 50 தொகுதிகளில் தி.மு.க. 100 சதவீதம் வெல்லும் வாய்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என்றாலும் சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது. உள்கட்சியில் நிலவும் பூசல்தான் அதற்கு காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது. இதையடுத்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதே போன்ற ஒரு கருத்து கணிப்பை அ.தி.மு.க.வும் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதில் எத்தகைய முடிவுகள் கிடைத்து இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.






