search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anbarasan"

    • தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
    • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சென்னை:

    போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.

    இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.

    பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

    • நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் வெளியேறுவதற்கு திட்டம் தயாரித்தோம்.
    • நீதிமன்றம் உத்தரவிட்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளதாவது: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம்,கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுரவாயில் புறவழிச் சாலையில் தண்ணீரை உரிய கல்வெர்ட் அமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியவில்லை.

    இதனால் ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து திட்டம் தயாரித்தோம். தேசிய நெடுஞ்சாலைத் துறை கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பொதுப் பணித்துறை இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது.

    இவ்வழக்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு துறைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காததுதான் இன்றைய நிலைக்கு காரணம்.  

    கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக என்னை அழைத்து சென்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, அதிகாரிகளுக்கு எல்லாம் உத்தரவிட்டு இந்த நிலைய முற்றிலுமாக போக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கி தந்தார்.

    செம்பரம்பாக்கதில் இருந்து வரும் தந்தி கால்வாய்க்கு கட் அண்டு கவர் அமைக்கும் பணியும், போரூரிலிருந்து ஒரு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரவாயில் புறவழிச்சாலையில் ஒரு புஸ்- கல்வெர்ட்டு நேற்று தான் அந்த சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் வெளி வந்தது. தற்போது இதன் வழியாக 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது.
    • மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அவர் பேசுகையில், சேகோ தொழிற்சாலையில் உள்ள பிரச்சனைகளை உற்பத்தியாளர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். உற்பத்தியாளர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

    இதுவரை செய்தது போல் இனியும் தவறு செய்ய அரசு அனுமதிக்காது. கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், சில வடமாநில மக்களுக்கு ஜவ்வரிசி தான் உணவாக உள்ளது. மக்களின் உணவில் நஞ்சு கலப்பது தவறு என்பதை உணர்ந்து தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும். ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய அரசு தயாராக உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்கள் தவறு செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மற்றும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் செல்வகணபதி, சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    • குங்பூ தற்காப்பு கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் மன்சூரியா குங்பூ தற்காப்பு கலையின் சர்வதேச தலைமையகம் உள்ளது. இதை நிறுவிய குங்பூ வீரர் சேகரின் 8வது நினைவஞ்சலி விழா நேற்று மதியம் பூஞ்சேரி கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் பேசிய அமைச்சர், தற்போது இளைஞர்கள் செல்போன், சோஷியல் மீடியா என அதில் முழு நேரமும் மூழ்கி உடலையும், மனதையும், முயற்சியையும் இழந்து வருகிறார்கள். குங்பூ தற்காப்புக்கலை, அவர்களை தீய செயல்களில் இருந்து மீட்டு வருவதை இங்குள்ள இளைஞர்களை பார்த்து உணர்கிறேன். இந்த கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    விழாவில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, குங்பூ பயிற்சியக செயலாளர் அஷோக்குமார் மற்றும் பிறமாநில, வெளிமாவட்ட குங்பூ மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×