என் மலர்
தலைப்புச்செய்திகள்
- Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.
இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா
முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.
இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதைமுன்னிட்டு, ஆண்டுதோறும் நாட்டின் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகை செப்.5ம் தேதி வழங்கப்படும்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதி.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்ஸை தடுத்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்பட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாகவும் பணியாற்றலாம்.
- வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது.
இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக 21 வயது போதுமானதாக இருக்கும் நிலையில், அரசியலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கலாம் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாக பணியாற்றலாம். 21 வயது நிரம்பினால்தான் அப்பேத்கர் அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும உரிமை வழங்கியது.
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. 21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தில் போட்டியிட்,டு வெற்றிபெற முடியாது?. சிந்தித்து இதை ஒரு திட்டமாக எடுத்துச் செல்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் இதுவரை உலகளவில் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
- தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- அவருக்கு சினிமா துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு சினிமா துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
என கூறினார்.
- பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
- புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இன்டர்நேஷனல் சென்சேஷன் எஸ்.எஸ்.ராஜமெளலி, மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் "ப்ரீ-லுக்" போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து, முழு லுக் எப்படி இருக்கும் என்ற யூகங்களும் பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்து வருகின்றன. படக்குழுவினர், முழு லுக் நவம்பர் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். "Baahubali: The Epic" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில், கூடுதல் காட்சிகள், நீளமான ரன்டைம், சில சர்ப்ரைஸ்களும் இருப்பதாக பேசப்படுகிறது.
இந்த பாகுபலி:தி எபிக் வெர்ஷனில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக வெளியிட இருக்கின்றனர்.
இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்டஹி தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.
இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் இன்னோவா கார் ஒன்று சேதம் அடைந்தது.
திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. சென்னை- திருத்தணி இடையிலான இந்த சுங்கச்சவாடி எப்போதும் பரபரப்பானதாக காணப்படும்.
இன்று மதியம் கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி, கண்டெய்னர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் Fastag பதிவிடுவதற்கான சற்று குறைவான வேகத்தில் வந்தது. அப்போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, வசூல் செய்யும் நபர் இருக்கும் கூண்டு மீது பயங்கரமாக மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஊழியர் வெளியேறியதால் அதிர்ஷ்டவமாக உயிர்தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த லாரி நின்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. இருந்தபோதிலும், காரில் இருந்த 3 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. லாரி மோதியதால் சுங்கச்சாவடி சேவை சிறிது நேரம் பாதித்தது.
- கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையின் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
- கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
தெற்கு காசாவில் உள்ள முக்கியமான மருத்துவமனையின் 4ஆவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இதுவாகும். கடந்த 22 மாதங்களாக நடைபெறும் தாக்குதல் காரணமாக மருத்துவனைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாஃப் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இஸ்ரேல் இது தொடர்பாக உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காசா முனையில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அதேவேளையில் தாக்குதலும் நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் 62,686 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம்.
- அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இரவும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தடியடி நடத்தி 40 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.
இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலை வாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு தடியடிதான் கிடைத்தது.
மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.
முதலில் அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள்.
அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்கமாட்டார்கள். தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
- தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
- படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ராம் சரணின் அம்மா கதாப்பாத்திரத்திற்கு லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகாவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சுவாசிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ராம் சரணின் தாய் கதாப்பாத்திரத்தில் அதற்குள் நடிக்க என்ன அவசரம். எனக்கு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தோணவில்லை." என கூறியுள்ளார்.
- ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
- அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.
பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.
மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.
இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.






