என் மலர்
நீங்கள் தேடியது "Swasika"
- தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
- படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ராம் சரணின் அம்மா கதாப்பாத்திரத்திற்கு லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகாவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சுவாசிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ராம் சரணின் தாய் கதாப்பாத்திரத்தில் அதற்குள் நடிக்க என்ன அவசரம். எனக்கு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தோணவில்லை." என கூறியுள்ளார்.
- சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சுவாசிகாவிற்கு தம்பியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என விவரிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
- லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சுவாசிகா.
- ரெட்ரோ படத்திலும் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சுவாசிகா.
சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ரெட்ரோ படத்திலும் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் சுவாசிகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதில் அவர் பேசியதாவது
`லப்பர் பந்து படத்தின் மூலம் எனக்கு ரொம்ப பாசம் கிடைத்திருக்கிறது. சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகர் ஜெயராம் கையினால் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கனவுகள் நிறைவேற உதவி செய்யும் என் புருஷனுக்கு மிகவும் நன்றி. படத்தில் நான் கெத்து பொண்டாட்டி. இங்கே நான் பிரேம் பொண்டாட்டி.'
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சுவாசிகாவிடம் ஒரு ஆண்மகன் கெத்தாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சுவாசிகா, கெத்தான ஆண் என்பவர் அவருடைய மனைவி மகள்கள் உடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றும் ஆண் தான் 'கெத்தானவர்' என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






