என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம்: ரேவந்த் ரெட்டி சொல்லும் காரணம் இதுதான்..!
    X

    அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம்: ரேவந்த் ரெட்டி சொல்லும் காரணம் இதுதான்..!

    • 21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாகவும் பணியாற்றலாம்.
    • வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது.

    இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக 21 வயது போதுமானதாக இருக்கும் நிலையில், அரசியலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கலாம் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாக பணியாற்றலாம். 21 வயது நிரம்பினால்தான் அப்பேத்கர் அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும உரிமை வழங்கியது.

    ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. 21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தில் போட்டியிட்,டு வெற்றிபெற முடியாது?. சிந்தித்து இதை ஒரு திட்டமாக எடுத்துச் செல்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×