என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-17 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : மூலம் இரவு 9.04 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. தென்காசி ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-தெளிவு

    கடகம்-பண்பு

    சிம்மம்-உண்மை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- களிப்பு

    மகரம்-சுபம்

    கும்பம்-வரவு

    மீனம்-செலவு

    • ஜெர்மனி பயணத்தில் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • இது தொடர்பான புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    innilaiyil, ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்தியாவின் டெட்ராய்ட் நகரமான சென்னையில் இருந்து, ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது, உலகின் முதல் காரையும், ஒரு புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்க்கும் அரிய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
    • பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது.

    2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

    அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான்  144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.    

    • எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
    • மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் தான் சிறந்த தலைவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று நிதின் கட்கரி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்ற தெரிந்தவர் தான் சிறந்த அரசியல்வாதி. எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.

    எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எழுதியிருக்கிறார்.

    வேண்டிய விஷயங்களை சாதிக்க பல குறுக்கு வழிகள் இருக்கும். நீங்கள் விதிகளை மீறி, ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம், ஆனால் ஒரு தத்துவ ஞானி சொன்னதுபோல், குறுக்குவழிகள் உங்கள் பயணத்தை முடக்கிவிடும்.

    எனவே உண்மை மற்றும் அர்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள்" என தெரிவித்தார். 

    • மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
    • கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூரு வந்தார்.

    மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலைமைச்சர் சித்தராமையா வரவேற்றனர்.

    பின்னர் AIISH வைர விழா நிகழ்வில் கலந்துகொண்டு தனது உரையை தொடங்கிய சித்தராமையா, மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.

    தனது உரையின் போது இதற்கு பதிலளித்த முர்மு, " முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.

    எல்லோரும் தங்கள் மொழியை உயிர்புடன் வைத்திருந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், கன்னடம் காற்றுக்கொள்ள நான் சிறுக சிறுக இனி முயற்சி செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.

    கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.
    • நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவற்றை மிகக் குறைவாகவே விற்கிறோம்.

    ரஷிய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் போருக்கு உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதனால் ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் அபராதமாக 25 சதவீத கூடுதல் வரி விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டார். இதனால் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை இந்தியாவை குறிவைத்துள்ளார்.

    அதாவது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய டிரம்ப், இந்தியா வேறு எந்த நாட்டையும் விட எங்களிடம் அதிகம் வரிகளை விதித்துள்ளது.

    அவர்கள் (இந்தியா) நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம்.

    2024 இல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    அதேவேளை இந்தியா தனது எண்ணெய் மற்றும் இராணுவப் உபகரணங்களை ரஷியாவிலிருந்து அதிகம் வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது.

    அவர்கள் (இந்தியா) இப்போது தங்கள் வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு செய்திருக்க வேண்டும். இந்தியா நீண்ட காலத்திற்கு முன்பே வரிகளைக் குறைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.  

    சீனாவில் நேற்று நடத்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி நெருக்கம் காட்டிய நிலையில் டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது. 

    • தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
    • வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நயாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுதிர் என்ற நபர் தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் ரூ.141 கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் இதுற்குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

    இதுகுறித்து சுதிர் கூறும்போது, "டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டும் எனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது" என்றார்.

    மற்றவர்களின் பான் கார்டு விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கிக் கணக்குகளைத் திறக்க, போலி நிறுவனங்களை உருவாக்க, கடன்களைப் பெற அல்லது வரிகளைத் தவிர்க்க அவற்றைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

    • அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
    • நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.

    மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதனால் மும்பை நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன. ரெயில் நிலையங்கள் உட்பட அங்கங்கே வன்முறை மற்றும்  கலவரமான சூழலும் நிலவியது.

    இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    நேற்று (திங்கள்கிழமை) நடந்த விசாரணையில், போராட்டங்கள் அமைதியாக நடத்தப்படவில்லை என்றும், அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.

    இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, "

    போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசாத் மைதானத்தில் அல்லாமல் ஏன் வெளியே சுற்றுகிறார்கள். ஐகோர்ட்டு கட்டிடம் கூட போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளது.

    'நீதிபதிகள், வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் மறிக்கப்பட்டது.  நீதிபதிகளின் கார் மறிக்கப்பட்டு விசாரணைக்கு வருவது தடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த நகரரும் ஸ்தம்பித்துள்ளது.

    நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.

    செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனைத்து தெருக்களும் காலி செய்யப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டது. 

    • அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
    • இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கிறது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுவரை 800க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் பேசினேன். நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    காபூலில் இன்று 1000 குடும்ப கூடாரங்களை இந்தியா வழங்கியது. காபூலில் இருந்து குனாருக்கு இந்திய தூதரகம் 15 டன் உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு துணை நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியும் ஆப்கனிஸ்தானுக்கு ஆன உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.  

    • 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
    • மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கம் நடைபெற்றது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று, டயமர் மாவட்டத்தின் சிலாஸில் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர்.

    மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு, புனேவிலிருந்து புசேடுக்குச் சென்ற பேருந்தில் அமர்ந்திருந்த 50 வயது பயணி ஒருவர் திடீரென்று, தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனால் அவர் சம்பவ உடல் கருகி இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில், இறந்தவரின் பெயர் சுனில் சஜ்ஜன்ராவ் டேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புல்தானா மாவட்டத்தின் மெஹ்கர் தாலுகாவின் அரேகான் கிராமத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

    தற்கொலை குறித்த காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் இருந்த 40 பயணிகள் பாத்திரமாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார்.
    • மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது அதிகாரப்பூர்வ அரசு மாளிகையை காலி செய்துள்ளார்.

    தற்போது தெற்கு டெல்லியில் உள்ள சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.

    கடந்த ஜூலை 21, பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

    உடல்நலப் பிரச்னைகளை அவர் காரணம் காட்டி இருந்தாலும், அவரது ராஜினாமா அரசியலில் பேசுபொருளாக மாறியது.

    ராஜினாமாவுக்கு பின் தன்கர் தகவல் ஏதுமின்றி காணாமல் போனதாகவும், பாஜகவின் அழுத்தத்தின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ இல்லத்திலேயே கடந்த 40 நாட்களாக இருந்து வந்தார் என்றும் தற்போது அங்கிருந்து காலி செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் அண்மையில் விண்ணப்பித்துள்ளார்.

    1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

    அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். 

    ×