என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
- சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதம் இருந்த சசிகாந்த் செந்திலுக்கு கடந்த 30-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை சசிகாந்த் செந்தில் நேற்று முடித்துக்கொண்டார்.
காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சசிகாந்த் செந்தில் நேற்று இரவு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
- காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
- திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என காரியாபட்டியில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சேர்மனின் சகோதரர் ஓட்டி சென்ற காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து அவர்களை அ.தி.மு.க.வினர் விரட்டி அடித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
- மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (03.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட் ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.
அம்பத்தூர்: அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் முதல் மூன்றாம் கட்டம், பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கே.ஜி., குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை.
திருவான்மியூர்: இந்திரா நகர் குறுக்கு தெரு 17 முதல் 20 வரை, 25 முதல் 29 வரை மற்றும் இந்திரா நகர் பிரதான சாலை, மாநகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எல்பி சாலை, ஆனந்த் அடுக்குமாடி அபார்ட்மெண்ட்.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் கார்டன் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, சீதம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, அப்பாதுரை தெரு, TTK சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். சாலை, ஜார்ஜ் அவென்யூ, SSI சாலை, HD ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.
- தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார்.
- திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்வதில்லை.
சென்னை :
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ.3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதலமைச்சர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதலளிக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா?
ஜெர்மனியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நாளிலேயே ரூ3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான Knorr-Bremse சென்னையில் உள்ள நிறுவனம் என்றும் அதனுடன் ஜெர்மனியில் போய் ஒப்பந்தமா என நயினார் கேட்டிருப்பது, தொழில்துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. Knorr Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவங்கப்பட்டது.
தற்போது 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரெயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும் !
மகாராஷ்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர்.
தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார். டாவோஸ் நகரிலிருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் அதுவும் அவர்களது தலைநகரமான மும்பையிலேயே உள்ள reliance நிறுவனத்தோடு வீடியோ கான்பரன்சில் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோசில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த reliance நிறுவனத்துடன் video conference மூலம் MoU போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும். திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்வதில்லை.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசே புள்ளிவிவர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுக்குமாறு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
- இந்தாண்டு ஓணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜுனைஸ் வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர். ஜுனைஸ் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
ரிஷபம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் செலவுகள் ஏற்படலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
மிதுனம்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண் டியநாள். நாடுமாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
சிம்மம்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பயணம் பலன்தரும்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
துலாம்
இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
விருச்சிகம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
தனுசு
யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியே உதவி கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும். ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பணிபுரிவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகும்.
கும்பம்
குறைய விரயங்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.
மீனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
- தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
- வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
ஜெர்மனியில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஜெர்மனி உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்.
* வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
* தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
* நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது.
* 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கொண்ட மாநிலத்திற்கு தொழில் தொடங்க அழைக்கிறேன்.
* பொருளாதாரத்தில் தமிழ்நாடு- ஜெர்மனி இடையே பாலம் அமைக்கவே தான் வந்துள்ளேன்.
* தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது.
* தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோருக்கு உகந்த சூழல் உறுதி செய்யப்படும்.
* Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது.
* ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க முடியும்.
* 54 லட்சம் MSME நிறுவனங்கள், முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
- தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது.
- இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம்.
பெற்ற பிள்ளை சாப்பாடு போடவில்லை என்றாலும், வளர்த்த பிள்ளை (தென்னை) சாப்பாடு போடும் என்பது பழமொழி.
இதைத்தான் நமது கவியரசு கண்ணதாசன், பிள்ளைய பெற்றால் கண்ணீரு, தென்னைய பெற்றால் இளநீரு என்று எழுதியிருப்பார். எத்தனை உண்மை பாருங்கள். அதனால்தான் தென்னையை பிள்ளையாக கருதி வளர்த்தனர் நம் முன்னோர்கள்.
நமது அன்றாட வாழ்க்கையில் தென்னையின் பயன்பாடு இல்லாமல் இருக்காது. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நமது உணவில் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இதுதவிர இளநீரை இயற்கையின் குளிர்பானமாக குடித்து வருகிறோம்.
தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது. இவற்றின் மூலம் கருப்பட்டி, வெல்லம் போன்ற பொருட்களும் நமக்கு கிடைக்கின்றன. தென்னை ஓலை நம் வீட்டின் நிழல் பந்தல் அமைப்பதற்கு பயன்படுகிறது.
இது தவிர தென்னை நாரில் இருந்து மெத்தை, காயர் பித் (தென்னை நார் கட்டி) உள்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு விதங்களில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் தென்னை மரங்களின் நடவு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக இருந்தாலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென்னை தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி உலக தென்னை தினம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. உணவு, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் வெப்பமண்டல நாடுகளில், மக்களின் வாழ்க்கையில் தேங்காய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அடையாளப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தென்னை தினம் கொண்டாடுவதற்கு ஒரு கருப்பொருள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தின் கருப்பொருள் 'தேங்காயின் சக்தியை வெளிக்கொணர்தல், உலகளாவிய நடவடிக்கைக்கு ஊக்கமளித்தல்' என்பதாகும்.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தென்னை மரம் தற்போது பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வண்டு தாக்குதல், வாடல்நோய் போன்றவைகள் தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை கட்டுப்படுத்த இயற்கை மற்றும் ரசாயன உரங்களால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மேற்கண்ட நோய்களின் தாக்குதலால் பொள்ளாச்சி மற்றும் தென்னை நடவு செய்த பகுதிகளில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நோய்களில் இருந்து தென்னையை காப்பாற்ற தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தென்னை விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பதும் தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
உலக தென்னை தினம் கொண்டாடும் நிலையில் "தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்" என்ற பழமொழிக்கேற்ப தென்னை மற்றும் தென்னை விவசாயிகளை செழிக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகனங்களின் உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜெர்மனி வருகையின் போது மொத்தம், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட மாடல் அரசு உரையாடல்களை உறுதிமொழிகளாகவும் நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மாற்றுகிறது என்று கூறியுள்ளார்.
- கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம்.
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-17 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : மூலம் இரவு 9.04 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. தென்காசி ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-தெளிவு
கடகம்-பண்பு
சிம்மம்-உண்மை
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நிறைவு
விருச்சிகம்-லாபம்
தனுசு- களிப்பு
மகரம்-சுபம்
கும்பம்-வரவு
மீனம்-செலவு
- ஜெர்மனி பயணத்தில் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இது தொடர்பான புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
innilaiyil, ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் VINTAGE கார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்தியாவின் டெட்ராய்ட் நகரமான சென்னையில் இருந்து, ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது, உலகின் முதல் காரையும், ஒரு புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்க்கும் அரிய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. காலத்தால் அழியாத பழங்காலப் பொக்கிஷங்களுக்கு மத்தியில், வரலாறு உயிர் பெறுவதை உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.






