என் மலர்
நீங்கள் தேடியது "உலக அமைதி"
- 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
- பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது.
2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.
அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.
- கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக மஹா சண்டி யாகம் நடந்தது.
- இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந் தேதி மஹா சண்டி ஹோமம் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை யாகசாலையில் வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் நேற்று காலை யாகம் வளர்க்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா சண்டி யாக பூஜை நடைபெற்றது.
இந்த யாகத்தில் 16 பட்டுப்புடவைகள், தங்க தாலி, வெள்ளி கொலுசு மற்றும் 237 வகையான மூலிகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், வில்வபழம், மாதுளை உள்பட பலவகை பழங்கள் மற்றும் தாமரைப்பூ, மல்லிகைப்பூ உள்பட அனைத்து வகையான பூக்கள், பாதாம், முந்திரி உள்பட அனைத்து வகையான தானியங்கள் போன்றவற்றை அக்னியில் போடப்பட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பதால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்று கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
இந்த மஹா சண்டி யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- உலக அமைதிக்கான வேள்வி நடைபெற்றது.
- மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்:
உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கடந்த 1958-ம் ஆண்டு உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கிய வேதாத்திரி மகரிஷி பிறந்த தினத்தை மனவளக்கலை மன்றத்தினர் உலக அமைதி தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் அறிவு திருக்கோவிலில் உலக அமைதிக்கான வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். உலகம் அமைதி பெற வேண்டி பேராசிரியர் பத்மாவதி தவவேள்வி நடத்தினார். பேராசிரியர் சுந்தர், ஞான ஆசிரியரின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் துணை தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்."






