என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    ‘பிளாக்மெயில்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

    இயக்குனர் மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள 'பிளாக்மெயில்' திரைப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜிவி பிரகாஷ் கூறுகையில்," படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார்.

    படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி.

    ரமேஷ் சார், முத்துக்குமார் சார், தேஜூ, லிங்கா மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

    • அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
    • முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.

    மூழ்கும் கப்பல் போன்ற கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக கூட்டணியை மூழ்கும் கப்பல் என செல்வப்பெருந்தகை விமர்சித்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    மேலும், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை விமர்ச்சித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் குரலாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல் மாறிவிட்டது.

    தமிழகதத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்போது டிடிவி தினகரன், செங்கோட்டையன் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் கட்சியிலேயே பல குழப்பங்கள் நிலவும் நிலையில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை பேசுகிறார் செல்வப்பெருந்தகை.

    செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    மேக் இன் இந்தியா திட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு புதிதாக ஸ்டிக்கர் ஒட்ட முதல்வர் வெளிநாடு பயணம்.

    முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.

    மாண்புமிக்க மனிதர்களான டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது.

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலின் ப்ரோமோ வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், டி.ராஜேந்திரன், அனிருத், சாண்டி ஆகியோர் துள்ளலாக நடமாடி இருப்பர்

    இந்நிலையில், சிக்கிடு பாடலின் ஒரிஜினல் வீடியோ இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

    • சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
    • சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    சென்டைன எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.

    மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.

    சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்.

    சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.

    சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.

    • தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில் இரண்டு நூல்களையும் அவர் வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

    இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!

    இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் மற்றும் முனைவர் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்;

    பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.

    ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.

    உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
    • ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90) வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.

    1,000-க்கும் மேற்பட்ட திரை பாடல்கள், 4,000 சுயாதீனப் பாடல்கள், 5,000 பக்திப்பாடல்களை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    குறிப்பாக செங்குட்டுவன் எழுதிய, நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, இறைவன் படைத்த உலகை போன்ற பாடல்கள் என்றும் நினைவில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் என கூறலாம்.

    • டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
    • பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.

    இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.
    • அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும்.

    தேனி கம்பம் வாரச்சந்தை அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.

    அதிமுக ஆட்சி அமைந்த உடன் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    உடம்புக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல், விவசாயிக்கு நீர் முக்கியம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, விவசாயிகளின் கஷ்டம் பற்றியும் தெரியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும்

    அதிமுக ஆட்சி வந்தவுடன் முறையாக மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு, அதிமுக தலைமையிலான அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
    • தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது.

    மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    • இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
    • செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

    அதிமுக ஒருங்கிணைய வலியுறுத்தி இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.

    இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முழங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    • திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
    • திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

    ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?

    பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!

    சொன்னீங்களே செஞ்சீங்களா

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×