என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
- செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைய வலியுறுத்தி இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர்.
இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முழங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
- திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
- திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!
பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏனோ? நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏனோ?
பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும்!
சொன்னீங்களே செஞ்சீங்களா
இவ்வாறு அவர் கூறினார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.இது அவருக்கு கிடைத்த இரண்டாவது கவுரவ விருதாகும்.
- உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
- மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியது. இப்படத்தில் திரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொண்டார்.
இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் படத்தில் பயன்படுத்திருப்பர். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
- பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது.
- விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டது என முறையிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஜுகர்பெர்க். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கறிஞர் மார்க் மெட்டா நிறுவன சி.இ.ஓ.வான மார்க் ஜுகர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தனது பேஸ்புக் கணக்கு 5 முறை முடக்கப்பட்டது என்றும், கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதால் இழப்பீடு தரவேண்டும் என முறையிட்டுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் தனது வணிகக் கணக்கை 5 முறையும், தனிப்பட்ட கணக்கை 4 முறையும் முடக்கியது.
எனக்கூறும் அவர், போலி பெயர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டுகளின் கீழ் தனது பக்கங்களை மூடியதற்காக தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அலட்சியமாக செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்.
ஒவ்வொரு முறையும் பேஸ்புக் கணக்கை திரும்பப் பெற பல மாதங்கள் ஆனது. கடைசியாக தனது கணக்கைத் திரும்பப் பெற 6 மாதங்கள் ஆனது. பேஸ்புக்கில் இல்லாததால் விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு செலவுகளில் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளேன்.
வழக்கறிஞர் மார்க் தனது போராட்டங்களை விவரிக்கும் வகையில் ஒரு வலைதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஒரே பெயரை கொண்டதால் ஏற்பட்ட இந்தக் குழப்பம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- திரைப்பிரபலங்கள் பலர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஓணம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
- ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல்.
- ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வழிமறித்து ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
மேலும், ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.
ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் ஆதரவு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர்.
சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ஒரு ஃபீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ளது. இதனை படக்குழு மற்றும் மோகன்லால் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஓபனிங்கில் ஹிருஹயபூர்வம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- அயோத்தி விமான நிலையம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
லக்னோ:
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறையை பாழடைந்த துறையாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் பள்ளிக்கல்வி துறையில் முதுகெலும்பான பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் தான் எனும் நிலையில் அந்தப் பணியிடங்களையே திமுக அரசு நிரப்பாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித் துறையில் இயக்குனர், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தான். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் பொதுக் கல்விக்கு ஒருவர், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒருவர் என இரு முதன்மைக் கல்வி அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட கல்வி அலுவலர் பணியமர்த்தப்பட்டு இருப்பர்.
பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லாவிட்டால் பள்ளிக்கல்வித் துறை செயல்படாமல் முடங்கி விடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், கரூர்.
கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்ம் தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 76 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களில் இவை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதேபோல், 23 மாவட்டங்களில் 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் போது அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணி இடங்களும், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களும் நிரப்பப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
இந்த அதிகாரிகள் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதாலும், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தான் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதாலும் இவற்றை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அரசின் அலட்சியம் தான் இன்று நிலவும் அவலநிலைக்கு காரணமாகும்.
இப்போதும் கூட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலாளருக்கும் தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் போது அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அந்தப் பட்டியலைக் கூட தயாரிக்காமல் கல்வித் துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்தான் செயல்படுத்த வேண்டும்.
மேலும் கல்விப் பணிகள் குறித்து முடிவெடுப்பதும், கற்றல், கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்தப் பணிகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் தான்.
அதுமட்டுமின்றி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் போது மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதனால், ஏற்படும் காலியிடங்களை நிரப்ப பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கப்படும். ஆனால், அரசின் அலட்சியத்தால் அனைத்து நிலை பதவி உயர்வுகளும் தடைபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை; தமிழக அரசே ஒரு கணக்குப் போட்டு 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது; தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2500-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இத்தகைய சூழலில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. ஆசிரியர் நாளை கொண்டாடும் வேலையில் கல்வித்துறையின் அவலங்களை பேசுவது வேதனையளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வித்துறையை மேம்படுத்துவது இருக்கட்டும்... ஏற்கனவே இருந்த நிலை மேலும் சீரழியாமல் தடுப்பதற்குக் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் விளைவு தான் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரே தீர்வு திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






