என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனது தொகுதி மக்களுக்கு மருத்துவமனை கேட்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சியின் சிங்கம்.

    மக்களின் குரலாக மாறி அவர்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள், இவை அனைத்தும் ஆம் ஆத்மியின் எந்த சிப்பாயையும் ஒருபோதும் பயமுறுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.  

    • ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
    • 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.

    மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

    இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

    இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும். 

    அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.

    ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.

    அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.

    பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

    • இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இரங்கல் தெரிவித்தார்.
    • காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.

    இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தலைவரும் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் .

    இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தி, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம், பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கும், இவை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சுயாதீனமான நடுவர் மன்றத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது,

    சந்திப்பின்போது, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

    காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.

    • இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
    • நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்துள்ளார்.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

    நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை  நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக  பிரதமர் சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் முயற்சிகளும், ஜென் Z தலைமுறையினரிடையே உள்ள தெளிவின்மையும் இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுத்தன.

    சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அதன் பயன்பாட்டிற்கு உகந்த சூழலை உறுதி செய்யாவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதற்கு மத்தியில் தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
    • துப்பாக்கியுடன் வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கபில் பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளை காப்பாற்ற வேண்டி வேலைக்காக 3 வருடங்களுக்கு முன் அமேரிக்காவுக்கு சென்றார்.

    இதற்காக, அவரது குடும்பம் சுமார் ரூ. 45 லட்சம் செலவிட்டது. ஆபத்தான டாங்கி ரூட் வழியாக மெக்சிகன் எல்லையைக் கடந்து பனாமா காடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.

    முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.

    இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த கபில் ஒரு அற்ப விஷயத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அண்மையில் அவர் பணிபுரிந்த கடைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழித்த ஒருவரை கபில் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அந்த நபர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் திரும்பி வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.

    கபிலின் உடலை அரியானாவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
    • மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    தோடா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்ட முதல் சிட்டிங் எம்எல்ஏ ஆவார். இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

    சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக தோடா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக சுமார் 18 எப்ஐஆர்கள் இருந்தது.

    இதன் அடிப்படையில், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் மாலிக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
    • பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது.

    இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

    பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

    • பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.

    இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

    • அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.

    ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

    • மிராய் திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • மிராய் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹனுமேன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர்.

    தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    மிராய் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், மிராய் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.

    பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.

    சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.

    தொடர்ந்து, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.

    • வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
    • மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது

    வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.

    முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    ×