என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.
சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.
தொடர்ந்து, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
- வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
- மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது
வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இட்லி கடை படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
- காஜல் அகர்வால் 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- காஜல் அகர்வால் தற்போது 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
திருமணமாகி குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் முன்புபோல சினிமாவில் கோலோச்ச காஜல் தயாராகி விட்டார். இதற்காக ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது.
ஆனால் இணையத்தில் பரவும் இத்தகைய தகவல் வதந்தி என்று நடிகை காஜல் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு ஃபீல் குட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இந்நிலையில், குமாரசம்பவம் படத்திற்கு கட் ஏதும் இல்லாமல் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுகுறித்து, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
- பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.
CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.
பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.
ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
- டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்த நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு செங்கோட்டையன்," ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.
அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்" என்றார்.
இந்நிலையில், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
- டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்ற நிலையில், டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- அட்டவணையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன வெளியிட்டுள்ளார்.
- சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது.
மேலும், இப்பபோட்டி சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். 2026-ல் நடைபெறவுள்ள ஆக்கி உலகக்கோப்பை இந்தியா வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
- நியூ டெல்லி- பாட்னா இடையே இயக்கப்பட வாய்ப்பு.
- 17 மணி நேர பயணம் 11.30 மணி நேரமாக குறையும்.
நாடு முழுவதும் முக்கியமான தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. பயணிகளிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படுக்கை வசதி (Sleeper) இருந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவிற்கு 11.50 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி- பாட்னா வழித்தடம் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய வழித்தடமாகும். பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பீகார் மற்றும் உ.பி.யில் இருந்து டெல்லிக்கு செல்வார்கள். அதேபோல் டெல்லியில் இருந்து பீகார், உ.பி.க்கு செல்வார்கள்.
* பாட்னாவில் இரவு 8 மணிக்கு புறப்பட்டால், டெல்லியை அடுத்த நாளை காலை 7.30 மணிக்கு சென்றடையும். வழக்கமாக 12 மணி முதல் 17 மணி நேரம் ஆகும். அது 11.30 மணி நேரமாக குறைக்கப்படும்.
* ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
* சிசிடிவி கேமரா, எல்இடி ஸ்கீரின்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.
- வீட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.
- புதிய மாவட்டங்களை உருவாக்கி அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைக்கப்பட்ட அதிமுகவின் 126 அடி உயர கொடிக் கம்பத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றினார்.
பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது:-
அதிமுக தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்ததால் இன்றும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வீட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.
புதிய மாவட்டங்களை உருவாக்கி அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம்.
இலவச பேருந்து பயணத்தை ஓசி பயணம் என திமுக முன்னாள் அமைச்சர் கொச்சைப்படுத்தினார்.
திண்டிவனத்தில் அரசு அலுவலரை திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழ வைத்தனர்.
அதிமுகவுக்கு சாதி, மதம் கிடையாது. அவற்றுக்கு அப்பாற்றப்பட்ட கட்சி அதிமுக.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது; போதைப்பொருள் புழக்கம் தாராளமாக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
- பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.
பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது பேசிய ஜி ஜின்பிங், "இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம். சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான இரண்டு நாடுகள். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். நண்பர்களாகவும், நல்ல அண்டை வீட்டாராகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம்" என்று பேசினார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், இந்தியா - சீனா உறவு குறித்து இந்தியாவுக்கான சீன தூதர் சு ஃபிஹோங் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். சீனாவும் இந்தியாவும் சேர்ந்து தெற்குலகின் குரலை வலுப்படுத்த வேண்டும். சீனாவில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம். இருநாடுகளும் இணைந்து ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.






