என் மலர்
இந்தியா

சீனாவுடனான உறவு... டிக் டாக் தடை நீக்கமா - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
- டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
- டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்ற நிலையில், டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story






