என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.
ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.
அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.
சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.
- பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
- நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் கலவரமாக மாறியதில் 19 இளைஞர்கள் பலி எதிரொலியாக நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்துள்ளார்.
- எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
- சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்
பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார்; ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எஸ்சி, எஸ்டி வழக்குபடி வரும் 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
இதனையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு நீதிபதி காரில் வைத்து அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், காவல்துறை வாகனத்திலேயே கிளைச்சிறைக்கு வருகை தந்தார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இட்லி கடை வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
- நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிப்பு.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இட்லி கடை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடித்துள்ள நடிகர் ராஜ்கிரணின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை தனுஷ் இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அந்த பதிவில்,"எனது முதல் ஹீரோ ராஜ்கிரண் அவர்கள் சிவனேசனாக.." என்று குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
- அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தை இயக்கினார்.
- சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
'ஓ மை கடவுளே' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தை இயக்கினார். டிராகன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இந்நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உடன் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், " அல்லு அர்ஜுன் உண்மையிலேயே ஒரு ஐகான் மற்றும் சிறந்த ஜெண்டில்மேன். என்னுடைய பணிகள் குறித்து உங்கள் அன்பு, அரவணைப்பு மற்றும் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி.
மேலும், இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் அவர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்தார்.
- கொரோனா காலத்தில் விளையாடியபோது, ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
டி20 யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டத்தால் உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து டி20 லீக்கிலும் விளையாடி முத்திரை பதித்தார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்காக அதிகப்படியான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆர்சிபி ஒரு கட்டத்தில் ஏலத்தில் எடுக்காத நிலையில், பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் செஞ்சூரி அடித்து அசத்தினார்.
2018ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 41 போட்டிகளில் விளையாடி 1339 ரன்கள் அடித்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரின்போது கொரோனா காலம் என்பதால், வீரர்கள் பயோ-பப்பிள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களை யாரும் அணுக முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது அணி தன்னை அவமரியாதையாக நடத்தியதாக உணர்ந்ததாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் கூறியதாவது:-
என்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் முன்னதாகவே முடிந்து விட்டது. பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன். ஐபிஎல் தொடருக்கு பெரிய பங்காற்றிய சீனியர் வீரர் என்ற மரியாதை அளிக்கப்படவில்லை. சிறுபிள்ளை போல என்னை நடத்தினார்கள். இதனால் ஒரு பெரிய கட்டிடம் என்னுடைய தோளில் இருப்பது போல் உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அழுத்தத்தை எதிர்கொண்டதாக உணர்ந்தேன்.
கொரோனா பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருக்கும்போது, பணத்தை விட உடல்நலம்தான் முக்கியம் என உணர்ந்தேன். இதனால் அனில் கும்ப்ளேயிடம் விவாதித்தேன். அணியை விட்டுச் செல்வதாக கும்ப்ளேவிடம் பேசியபோது மனமுடைந்து அழுதேன். பயிற்சியாளர் மற்றும் அணி ஆகியவை தன்னை நடத்திய விதத்தினால் ஏமாற்றம் அடைந்தேன்.
போகாதீர்கள் இருங்கள், அடுத்த போட்டியில் விளையாடுங்கள் என கே.எல். ராகுல் என்னை அழைத்துப் பேசினார். உங்களுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டேன்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.
- நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார்.
- என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.
இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், நஞ்சின் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்," கடந்த 15 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். அதில் கடந்த 5 வருடங்களாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம், தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.
திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கூட நாங்கள் இருவரும் ரிசார்ட் சென்று இருந்தோம். அதன் பிறகு, நாம் பழக வேண்டாம், அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறது என்றார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.
- எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
- சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்
பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார்; ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எஸ்சி, எஸ்டி வழக்குபடி வரும் 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
இதனையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு நீதிபதி காரில் வைத்து அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷ் சக காவலர்கள் உதவியுடன் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார்
- அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் நடிக்கும் படத்தை மதன் இயக்குகிறார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. இதனை தொடர்ந்து அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார்.
Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை மதன் இயக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இந்நிலையில், அனஸ்வரா ராஜன் பிறந்தநாளை ஒட்டி படக்குழு அனஸ்வராவுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
- டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி.
- ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்தனர்.
ஏர்போர்ட் மூர்த்தியை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.
- விராட் கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10ஆம் தேதியும், பாகிஸ்தானை 14ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளரான உமர் குல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கூறியதாவது:-
இந்திய அணி பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம். கடினமான காலத்தில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணி வலுவானதாக தோன்றுகிறத. ஆனால், டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் (ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினால்) அல்லது ஒரு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால், போட்டியை மாற்ற முடியும்.
அனைத்து முக்கியமான தொடர்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வார்கள்.
இவ்வாறு உமர் குல் தெரிவித்தார்.
இந்தியா கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் விளையாடியது.






