என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு - கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் டி.எஸ்.பி. தப்பியோட்டம் என தகவல்
    X

    நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு - கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் டி.எஸ்.பி. தப்பியோட்டம் என தகவல்

    • எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
    • சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

    பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார்; ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எஸ்சி, எஸ்டி வழக்குபடி வரும் 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு நீதிபதி காரில் வைத்து அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷ் சக காவலர்கள் உதவியுடன் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×