தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com