search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather Condition"

    சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் இன்று விமானங்கள் தாமதமாக வந்து செல்கின்றன. #ChennaiRain #ChennaiAirTraffic
    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நகர்ப்புறங்களில் ஒருசில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மெதுவாக இருந்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் இன்று காலையில் விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்தில் மட்டும் இன்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



    அரபிக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என்றும்,  அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiRain #ChennaiAirTraffic
    ×