என் மலர்
இந்தியா

விரைவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்..!
- நியூ டெல்லி- பாட்னா இடையே இயக்கப்பட வாய்ப்பு.
- 17 மணி நேர பயணம் 11.30 மணி நேரமாக குறையும்.
நாடு முழுவதும் முக்கியமான தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே உள்ளது. பயணிகளிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படுக்கை வசதி (Sleeper) இருந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவிற்கு 11.50 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி- பாட்னா வழித்தடம் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய வழித்தடமாகும். பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பீகார் மற்றும் உ.பி.யில் இருந்து டெல்லிக்கு செல்வார்கள். அதேபோல் டெல்லியில் இருந்து பீகார், உ.பி.க்கு செல்வார்கள்.
* பாட்னாவில் இரவு 8 மணிக்கு புறப்பட்டால், டெல்லியை அடுத்த நாளை காலை 7.30 மணிக்கு சென்றடையும். வழக்கமாக 12 மணி முதல் 17 மணி நேரம் ஆகும். அது 11.30 மணி நேரமாக குறைக்கப்படும்.
* ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
* சிசிடிவி கேமரா, எல்இடி ஸ்கீரின்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.






