என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
- எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.
* எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
* சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.
* நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மற்றும் மின்சார ரெயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களால் பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயணிகள் சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது. இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15 மணி, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
- உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்லி கிர்க்கை சுட்டவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
- இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் தட்டிச் சென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2018 -ம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.
மேலும் 7 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சாகும். புவனேஷ்வர் குமார் 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.
- கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.
- அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.
திண்டிவனம்:
பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,
* தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.
* கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் பா.ம.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
* நான் இன்றி அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் வளர்ந்திருக்க முடியாது.
* பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம்.
* கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.
* அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.
* பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை.
* பிள்ளையாகவே இருந்தாலும் எனது கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது.
* அன்புமணி ஆதரவாளர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன்.
* இரா. என்ற இன்சியலை தவிர ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது.
* அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியது கட்சிக்கு பின்னடைவு இல்லை.
* என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய், அன்புமணி பேசுவதெல்லாம் பொய் என்றார்.
- என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம்.
- இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன்.
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.இதையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம். என்னுடைய முதல் படமான செல்லமே 2004 இல் வெளியானது. இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன். 21 ஆண்டுகாலம் என்பது என்னுடைய வெற்றி அல்ல, உங்களின் வெற்றி. நீங்கள் என் படத்தை தியேட்டரில் பார்க்க கொடுக்கும் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன்.
- மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது.
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மதுரை விமான நிலையத்தில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
* எடப்பாடி பானிசாமி அரசியல் செய்வதை சுட்டிக்காட்டினேனே தவிர, தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
* எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
* கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது என்றார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து சுலபமாக வெற்றி பெற்றது என்றார்.
- விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
- த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6-ந்தேதி அனுமதி கோரி மனு அளித்த நிலையில் விஜய் பிரசாரம் குறித்து பேச அழைப்பு விடுத்தும் த.வெ.க. நிர்வாகிகள் செல்லவில்லை என்றும், த.வெ.க. நிர்வாகிகள் பேசாததால் தற்போது வரை பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.
தற்போது வரை அனுமதி அளிக்கப்படாததால் விஜய் பெரம்பலூர் செல்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
- விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.
- இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்க ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,
* இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை.
* தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.
* விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.
* இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.
* ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையில் அடிப்படையில் பா.ம.க. செயல்தலைவர் பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணியை நீக்குகிறேன் என்றார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
- சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
இந்நிலையில் வேதமூர்த்தி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எனது மருமகன் திரு. சபரீசன் அவர்களின் தந்தையார் திரு. வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரு. வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
- அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீ மோகன் பகவத் ஜி தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
அவரது 75வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், மோகன் ஜி மற்றும் அவரது ஊக்கமளிக்கும் ஆளுமை குறித்து சில எண்ணங்களை எழுதினார். அன்னை பாரதியின் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
- விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உச்சத்தில் விற்பனையான தங்கம் விலை நேற்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138






