என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
- அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீ மோகன் பகவத் ஜி தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
அவரது 75வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், மோகன் ஜி மற்றும் அவரது ஊக்கமளிக்கும் ஆளுமை குறித்து சில எண்ணங்களை எழுதினார். அன்னை பாரதியின் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
- விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உச்சத்தில் விற்பனையான தங்கம் விலை நேற்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
- நயினார் நாகேந்திரனுடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.
சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் சூர்யகுமார் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
13-வது ஓவரில் ஷிவம் துபே பந்து வீச ஓடி வரும் போது இடுப்பில் வைத்திருந்த சிறிய துண்டு கிழே விழுந்தது. அதை கவனிக்காமல் துபே பந்து வீசுவார். அந்த ஷாட்பிட்ச் பந்தை ஐக்கிய அரபு அமீரக வீரர் ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. அப்போது ஜூனைத் சித்திக் துண்டு கிழே விழுந்து விட்டதாக துபேவிடம் கூறுவார். அப்போது அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார்.
உடனடியாக சஞ்சு சாம்சன் ஸ்டம்பு மீது பந்தை எறிந்து ஸ்டம்பிங் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார்.
இதற்குள் இந்திய கேப்டன் சூர்யகுமார் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். அவரது பெருந்தன்மையால் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜூனைத் சித்திக் (0) அதே ஓவரிலேயே கேட்ச் ஆகிப் போனார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
எமிரேட்ஸ் அணியை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிவேகமாக விரட்டிப்பிடித்த இலக்கு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதே இந்தியாவின் துரித சேசிங்காக இருந்தது.
- வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார்.
வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. அண்மையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
- எலிசனின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
- ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார்.
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரராக ஆகி உள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தி உள்ளார்.
ஆரக்கிள் இணை நிறுவனரின் மொத்த நிகர மதிப்பு எலான் மஸ்க்கின் 385 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது 393 பில்லியன் டாலர்களைத் தொட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளின் பங்குகள் 43 சதவீதம் வரை உயர்ந்ததால், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தனது இடத்தை எலோன் மஸ்க் இழந்துள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை எலிசன் தன்வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு 101 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
ஆரக்கிளை இணைந்து நிறுவிய 81 வயதான எலிசன், தற்போது தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளார். அவரது நிகர மதிப்பில் பெரும்பகுதி தரவுத்தள மென்பொருள் நிறுவனத்தில் உள்ளது.
தற்போது எலிசன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
- தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தற்போதைய சூழலில் நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை
* அ.தி.மு.க.வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு கிடையாது.
* அ.தி.மு.க.வில் தற்போதைய சூழலில் எந்த பிளவும் இல்லை.
* தி.மு.க. வலிமையாக இருப்பதாக அண்ணாமலை எங்கேயும் கூறவில்லை. அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
* ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது சாதாரணமானது.
* அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய தகவல் முழுமையாக எனக்கு தெரியாது.
* அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
* 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் யார் ICU-வில் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார்.
- அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
- எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.
செய்யூர்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா என்கிற தலைப்பில் நேற்று முதல் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் நடைபெற்ற கிராம அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
ஆனால், நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக்கூடாது என்று பேசி வருகிறோம், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கஞ்சாவுக்கு அடிமையானால் மீள முடியாது.
எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.
உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள், அதற்காக தான் நான் பல போராட்டங்களை நடத்தி உள்ளேன். நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை, என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து மற்றவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் சாந்த மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
- கடந்த 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அவர் 31-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந் தேதிக்குள் (அதாவது நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டாக்டா் ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் மெயின் ரோடு, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.
பூந்தமல்லி: வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு, பனிமலர் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.
திருமங்கலம்: மெட்ரோ சோன், சத்திய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூபிலி பிளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், மாட வீதிகள், சிவன் கோவில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி சாலை, நியூ காலனி மற்றும் மேட்டுக்குளம்.
எழும்பூர்: ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மையா சாலை, ரிதர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் லேன், பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வெனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹைல், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் சாலை, பார்க் டவுன், வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பிரகின்பாட் சாலை, எச். சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பேரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கரை வீர பத்திரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஜெரேமியா சாலை.






