என் மலர்
கிரிக்கெட் (Cricket)

Spirit Of Cricket.. சூர்யகுமார் செய்த நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் சூர்யகுமார் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
13-வது ஓவரில் ஷிவம் துபே பந்து வீச ஓடி வரும் போது இடுப்பில் வைத்திருந்த சிறிய துண்டு கிழே விழுந்தது. அதை கவனிக்காமல் துபே பந்து வீசுவார். அந்த ஷாட்பிட்ச் பந்தை ஐக்கிய அரபு அமீரக வீரர் ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. அப்போது ஜூனைத் சித்திக் துண்டு கிழே விழுந்து விட்டதாக துபேவிடம் கூறுவார். அப்போது அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார்.
உடனடியாக சஞ்சு சாம்சன் ஸ்டம்பு மீது பந்தை எறிந்து ஸ்டம்பிங் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார்.
இதற்குள் இந்திய கேப்டன் சூர்யகுமார் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். அவரது பெருந்தன்மையால் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜூனைத் சித்திக் (0) அதே ஓவரிலேயே கேட்ச் ஆகிப் போனார்.






