என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
- INDVsPAK கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
- போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போட்டி நடக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து முதமுறையாக இந்தியா அணி மனம் திறந்து பேசியுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இந்திய அரசு என்ன முடிவு செய்கிறதோ அதற்கு பி.சி.சி.ஐ ஒத்துழைக்கிறது. எங்கள் கவனம் எப்போதும் போட்டியில்தான் இருக்கும். இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. இவர் இந்தாண்டில் தக் லைஃப் மற்றும் மாமன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இவர் அடுத்ததாக கட்டா குஸ்தி 2, கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மலா மற்றும் பிஸ்மி ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் ஐஷ்வர்யா ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவர் தான் சமூக ஊடங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில் " இந்த துறையில் பலருடன் பழகுவதற்கும் கற்றுக் கொள்ளவும் தான் இந்த சமூக ஊடகத்திற்கு வந்தேன். ஆனால் அது ஒருக்கட்டத்தில் அது என்னை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டது. என்னுள் இருக்கும் குழந்தைதனத்தை அது அழிக்கிறது. சிறு சிறு தருணங்களும் மகிழ்விக்க முடியவில்லை. சுய சிந்தனையையும் அது பறித்துவிட்டது" என அவர் கூறியுள்ளார்.
- காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
- அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர்.
காங்கோவின் வடமேற்கு மாகாணமான ஈக்வேட்டரில் வியாழக்கிழமை மாலை, லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதில் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசன்குசு பகுதியில் மற்றொரு மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் இறந்த 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இரவில் அதிக சுமையுடன் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக தெரிகிறது.
காங்கோவில் மோசமான சாலை கட்டமைப்புகள் காரணமாக, மக்கள் மலிவான படகு பயணங்களை அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபனின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷுடன் பணியாற்றியது குறித்த நடிகர் பார்த்திபன் கூறுகையில், 'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக... என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதாவது பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்,
Friends..
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.
உஷார்!!! என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, அப்படி என்ன அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து யூகித்து பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
- வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.
வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் இந்த ஜோடி தோல்வியடைந்தது.
- தொடர் தோல்விகளுக்கு தற்போது சாத்விக்-சிராக் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடி உடன் மோதியது.
இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர்செட்கணக்கில் வெறும் 38 நிமிடங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.
இது 2024 ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனுக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஜோடியின் முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உதிவே முதல்முறையாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த இந்த ஜோடி அந்த தோல்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
- விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.
- குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.
புதுக்கோட்டை:
த.வெ.க. தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தை பின்பற்றி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.
* 20 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களால், எத்தனையோ விதமான இடையூறுகளை கடந்து 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
* குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.
* தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவது தான் வெற்றி.
* தடைகள் இருக்கும். தடைகளை உடைத்து வருவதுதான் வெற்றி.
* ஆட்சியில் பங்கு என்பதை வரவேற்கிறோம். ஏன் என்றால்.. அதிகாரம் ஒரே இடத்தில் இல்லாமல், எல்லாருக்கும் பகிர்ந்து தரப்படும்போது கேள்விகள் கேட்க முடியும். மக்களுக்கு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
இதனிடைய, அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் ஒன்றாக இருந்தால் தான் பலம். பிரிந்து இருந்தால் எப்படி பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறினார்.
- விஜய்யை பார்த்ததும் வருங்கால முதல்வர் வாழ்க... தளபதி வாழ்க... என விண்ணதிர முழக்கமிட்டனர்.
- அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2026-சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று திருச்சியில் இருந்து தொடங்கினார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரு மாநாடுகளை நடத்தி த.வெ.க. கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை அறிவித்தார்.
இதில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். இது தமிழக அரசியல் அரங்கில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தியது.
இன்று நடைபெற்ற அவரது முதல் மக்கள் சந்திப்பு பிரசார நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து இன்று காலை த.வெ.க. தலைவர் விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார்.
விமான நிலையத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யை பார்த்ததும் வருங்கால முதல்வர் வாழ்க... தளபதி வாழ்க... என விண்ணதிர முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார வாகனத்தில் இருந்து கையசைத்தபடி வந்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர், அரியலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
த.வெ.க.வினர் 20-ந்தேதி கேட்ட நிலையில் அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாற்று இடங்களாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் இடவசதி போதாது விஜய் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கதைக்களம்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று நாயகன் குமரன் தங்கராஜ் முயற்சி செய்து வருகிறார். இவரது இலட்சியம் திரைவேறாமல் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் வருத்தம் அடைகிறார். ஒரு கட்டத்தில் தன் தாத்தா ஜி.என்.குமாரை படம் தயாரிக்க சொல்லி கேட்கிறார்.
சரி என்று சொல்லும் ஜி.என்.குமார், திடீரென்று இறந்து விடுகிறார். அவர் இறந்த பிறகு ரூபாய் 20 கோடி மதிப்புள்ள வீட்டின் உயிலை நான்கு பங்காக பிரித்து வைத்து இருப்பது குமரனுக்கு தெரிய வருகிறது. நான்கு பங்காக இருப்பது குமரனுக்கு பிடிக்கவில்லை.
இறுதியில் ஜி.என்.குமார் எழுதி வைத்த உயிலில் நான்கு பங்கு யாருக்கு? ஏன் குமரனுக்கு பிடிக்கவில்லை? இறுதியில் இயக்குனராகும் லட்சியம் குமரனுக்கு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் குமரன், சின்னத்திரையில் இருந்து முதல் முறையாக வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணாவிற்கு அதிகம் வேலை இல்லை.
சமூக போராளி எழுத்தாளராக வரும் குமரவேல் அலட்டல் இல்லாத அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஜி.என். குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், தாரணி ஆகியோரின் நடிப்பு படத்தின் கதைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இயக்கம்
நாயகனின் இலட்சியத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். முதல் பாதி திரைக்கதை தெளிவில்லாமல், காமெடி காட்சிகள் ஒர்க்கவுட் ஆகாமல் செல்கிறது. இரண்டாம் பாதி தெளிவாகவும், காமெடியாகவும் நகர்த்தி இருக்கிறார். குறிப்பாக பால சரவணனின் காமெடி கைகொடுத்து இருக்கிறது.
இசை
அச்சு ராஜாணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஜெகதீஷ் சுந்திரமூர்த்தி ஒளிப்பதிவு கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.
தயாரிப்பு
Venus Infotainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 2.5/5
- இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.
- மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
- மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.
- ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தின் நடுவில் அமைச்சர் தினேஷ் பேசியதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டத்திற்கு தான் தலைமை தாங்குவதாகவும், கூட்டத்தில் பேச விரும்பினால் முதலில் அனுமதி பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.






