என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
- புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுவது தான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம்.
ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு ஜாய் கிரிசில்டா கூறியிருப்பதாவது:-
"கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது."
நான் உள்ளே துடிக்க
நீ வெளியே தப்பிக்கிறாய்…
இதுதானா உன் அன்பு அறிமுகம்….???? என்று கூறியுள்ளார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை முதல் 17-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நீங்கள் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
- உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
"மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம்.
இன்று இம்பால் மற்றும் சூரசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை!
864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 இடம்பெயர்ந்தனர்.
நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை.
மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக!. உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.
நீங்களும் அமித் ஷாவும் காட்டிய திறமையின்மை மற்றும் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது.
மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.
தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்ததிற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு கூட இல்லை.
நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள். அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படுபவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்!" என்று தெரிவித்துள்ளார்.
- கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
- அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.
பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.
- இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
- நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆண்டுதோறும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த கலை பண்பாட்டு துறையில் பதிவு பெற்றுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த 80 கிராமிய கலைஞர்களுக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் விலையில்லா இசைக்கருவிகள், கலைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு நாதஸ்வரம், சுருதி பெட்டி, சீவாளி மற்றும் தவில், கட்டைக் கூத்து, தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து ஆகிய கலைப்பிரிவை சேர்ந்த கலைஞர்களுக்கு கூத்து ஆடை உபகரணங்கள், மத்தளம், ஆர்மோனியம் போன்றவையும், வில்லு, கரகம், காவடி உள்ளிட்டவைகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விலையில்லாமல் இலவசமாக வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த கலைஞர்களை தேர்வு செய்து கலை பண்பாட்டு துறை மூலமாக 80 கலைஞர்களுக்கு தவில், நாதஸ்வரம் கிரீடம் உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளதாகவும் இந்த கருவிகள் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படும் என்று கூறிய அவர் கடைக்கோடியில் உள்ள கலைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்றார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவில்தான் இருக்கைகள் அங்கு உள்ளது. நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வேலு எம்.எல்.ஏ., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) கே.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் (பொ) கவிதா ராமு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், சென்னை அரசு இசை கல்லூரி முதல்வர் கலைமாமணி ஆண்டான் கோயில் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
- பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை.
- ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரம் காளியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். தி.மு.க. அமைச்சர்கள் டிபன் பாக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள். பத்திரபதிவுத்துறை அமைச்சரின் தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்களை எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களது ஆட்சியிலே கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
புதிதாக மண்டல தலைவர் யாராக இருந்தாலும் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. முன்னால் இருந்தவர்கள் ரூ.250 கோடியை சுவாகா செய்து விட்டார்கள்.
பொற்கைப் பாண்டியன் வாழ்ந்த மதுரையில் மன்னராட்சி நடக்கிறது. ஒரு திருடனும் வரமாட்டான். குற்றம் செய்தவர்களே மாமன்றத்தை நடத்துவது சரியா?.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. விஜயினால் படம் தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது என சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி 4 வருடமாகி விட்டது. அதனை திறக்க முடியவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். அது முடியாது.
கலைஞர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்வதில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சி தான் வேண்டும் என அ.தி.மு.க. பற்றிதான் பேசுகிறார்களே தவிர தி.மு.க. பற்றி பேசுவதில்லை. எடப்பாடியார் பொதுச்செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.வு க்கு வெற்றி எளிது என உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
- INDVsPAK கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
- போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போட்டி நடக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து முதமுறையாக இந்தியா அணி மனம் திறந்து பேசியுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இந்திய அரசு என்ன முடிவு செய்கிறதோ அதற்கு பி.சி.சி.ஐ ஒத்துழைக்கிறது. எங்கள் கவனம் எப்போதும் போட்டியில்தான் இருக்கும். இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. இவர் இந்தாண்டில் தக் லைஃப் மற்றும் மாமன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இவர் அடுத்ததாக கட்டா குஸ்தி 2, கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மலா மற்றும் பிஸ்மி ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் ஐஷ்வர்யா ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவர் தான் சமூக ஊடங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில் " இந்த துறையில் பலருடன் பழகுவதற்கும் கற்றுக் கொள்ளவும் தான் இந்த சமூக ஊடகத்திற்கு வந்தேன். ஆனால் அது ஒருக்கட்டத்தில் அது என்னை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டது. என்னுள் இருக்கும் குழந்தைதனத்தை அது அழிக்கிறது. சிறு சிறு தருணங்களும் மகிழ்விக்க முடியவில்லை. சுய சிந்தனையையும் அது பறித்துவிட்டது" என அவர் கூறியுள்ளார்.
- காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
- அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர்.
காங்கோவின் வடமேற்கு மாகாணமான ஈக்வேட்டரில் வியாழக்கிழமை மாலை, லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதில் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசன்குசு பகுதியில் மற்றொரு மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் இறந்த 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இரவில் அதிக சுமையுடன் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக தெரிகிறது.
காங்கோவில் மோசமான சாலை கட்டமைப்புகள் காரணமாக, மக்கள் மலிவான படகு பயணங்களை அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபனின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷுடன் பணியாற்றியது குறித்த நடிகர் பார்த்திபன் கூறுகையில், 'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக... என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதாவது பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்,
Friends..
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.
உஷார்!!! என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, அப்படி என்ன அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து யூகித்து பதிவிட்டு வருகின்றனர். பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
- வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.
வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் இந்த ஜோடி தோல்வியடைந்தது.
- தொடர் தோல்விகளுக்கு தற்போது சாத்விக்-சிராக் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடி உடன் மோதியது.
இப்போட்டியில் 21-17, 21-15 என்ற நேர்செட்கணக்கில் வெறும் 38 நிமிடங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.
இது 2024 ஆம் ஆண்டு தாய்லாந்து ஓபனுக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஜோடியின் முதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உதிவே முதல்முறையாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்த இந்த ஜோடி அந்த தோல்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.






