என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன்- திருச்சி கூட்டத்தில் விஜய்.
    • மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார்.

    தவெக விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.

    அதன் பிறகு அவர் பேசியதாவது:-

    போருக்கு செல்வதற்கு முன் பெற்றி பெறுவதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவர்.

    அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்துள்ளேன்.

    திருச்சியில் இருந்து தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.

    மடதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்.

    1956-ல் அறிஞர் அண்ணா, 1974-ல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி.

    உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கணெக்ட், மனதில் ஒரு பரவசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது.
    • விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்தில் திருச்சியில் திரண்ட கூட்டம் பற்றி பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    திருச்சியில் பெரிய அளவில் கூட்டம் திரண்டு இருப்பது உண்மைதான். நடிகருக்காக கூட்டம் கூடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

    ஆனால் இவ்வளவு கூட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் தேவை. காவல் துறை 23 கட்டளை 43 கட்டளை என்று பிறப்பித்து விட்டு அரசியல் கட்சி தலைவர்களை போல் இருக்கக்கூடாது.

    எவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து எவ்வளவு கூட்டம் வந்தாலும் கூட்டத்தை நெறி முறைப்படுத்த வேண்டும். திரண்டு இருப்பது இளைய தலைமுறை. அவர்கள் மனம் நோகாதபடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கூட்டத்தை காவல் துறையினர் ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆளும் கட்சிக்கு கொடுக்கும் பாதுகாப்பை மற்ற கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும்.

    விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். நடக்கப் போவது மாநில தேர்தல். ஆட்சி மாற்றம் தேவை. எனவே தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.

    விஜய் ஒன்றிரண்டு நாட்கள் வருவதால்தான் அதிக அளவில் கூடுகிறார்கள். அதிக நாட்கள் அவர் மக்களை சந்திக்க வேண்டும். திரளும் கூட்டம் ஒட்டு மொத்தமாக ஓட்டாகி விடுமா என்பது தெரியாது. ஆனால் இவ்வாறு திரளும் கூட்டத்தை சமூகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் விஜய் அக்கறை காட்ட வேண்டும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    • உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.
    • பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் இணையத்தில் வைரலானது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.18 கோடி மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது.

    உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா வைத்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம் என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

    • மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது.
    • இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    புதிய மின்சார மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 2027ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முதற்கட்டமாக, இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட CBU வடிவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெறும் மின்மயமாக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் GLC பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் தளத்தின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் டூயல்-மோட்டார் டிரைவ் டிரெய்ன் கொண்டிருக்கிறது.

    மிகவும் விலையுயர்ந்த மாடலாக GLC 400 4MATIC இருக்கும். இதில் உள்ள இரண்டு மோட்டார்கள் 360kW டார்க் உற்பத்தி செய்கிறது. பின்புற மோட்டார் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் முன்புற ஆக்சிலில் டிஸ்கனெக்ட் யூனிட் கொண்டுள்ளது. இது நிலைமைகள் அனுமதிக்கும் போதெல்லாம் துண்டிக்க முடியும், இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும்.

    இந்த யூனிட் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய 94kWh லித்தியம்-அயன் பேட்டரி யூனிட் உள்ளது. புதிய 800-வோல்ட் மின் கட்டமைப்போடு இணைந்து, இந்த பேட்டரி 571 முதல் 713 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று WLTP சோதனைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன் 330kW வரை அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.



    மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது. இது ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இதில் 39.1 இன்ச் அளவில் டேஷ்போர்டு முழுக்க நீள்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸில் இதுவரை நிறுவப்பட்ட மிகப்பெரிய ஸ்கிரீனாக அமைகிறது. இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    பவர்டிரெய்ன் மற்றும் டிஜிட்டல் இன்டீரியர் இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது, GLC-இன் இந்த தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த கார் அளவீடுகளில் 4,845 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 2,972 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க அதிக இடவசதி உள்ளது. மேலும் அதிக ஹெட்ரூம் உள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் GLC-இன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பிரெமன் ஆலையில், வழக்கமான முறையில் இயங்கும் வேரியண்ட்களுடன், நிகர கார்பன்-நடுநிலை அடிப்படையில் நடைபெறும்.

    • விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
    • வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    திருச்சியில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.

    வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.

    விஜய்யை காண்பதற்காக 3 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் பரப்புரையை கேட்க திருச்சி சாலைகள் முழுவதும் மக்கள் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் தனது கையில் வேல் வைத்தபடி வந்திருந்தார். ரசிகர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்த வேலை விஜய் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    • மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்திட - இன்னும் விரைவாகத் தீர்வுகளை அளித்திட, துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

    இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
    • மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.

    * இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

    * இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

    * 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

    * இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.

    * மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:

    * வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

    * வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.

    * மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.

    * மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    * முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி.

    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் பரப்புரை மேற்கொண்ட த.வெ.க. தலைவர் விஜய்யை காண்பதற்காக பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மரக்கடை பகுதியில் குவிந்தனர்.

    காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த விஜய் 10.35 மணிக்கெல்லாம் தனது பரப்புரையை தொடங்கி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொண்டர்களின் வெள்ளத்தில் நீந்தி மெதுவாக வந்ததால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அப்போது, விஜய்யின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    வெளியின் தாக்கம் மற்றும் உணவு, தண்ணீர் இன்றி தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுகின்றனர்.

    மயக்கம் அடைந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், தேர்தல் பரப்புரைக்காக திருச்சிக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய்யை காண பெரும் கூட்டம் கூடியதால் திருச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    குறிப்பாக, விமானம் நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் என திருச்சியின் முக்கிய சாலைகள் முழுவதும் பல கிலோ மீட்டருக்கு த.வெ.க. தொண்டர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியமால் தவித்தனர்.

    • தற்போது வரை விஜய் தலைமையில் கூட்டணி என்பது அமையவில்லை.
    • திமுக கூட்டணியை வீழ்த்தும் அறவிற்கு விஜய் பலம் பெறவில்லை.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று திருச்சி மரக்கடையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பிரசார வேன் மூலம் மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார்.

    ஆனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால், மதியம் 10.30 மணிக்கு பிரசார வேன் வர வேண்டிய நிலையில், இன்னும் வந்து சேரவில்லை. தொண்டர்கள் வெள்ளத்தில் தத்தளித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், விஜயின் பிரசாரம் மற்றும் தொண்டர்களின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு திருமாவளவன் பதில் அளிக்கையில் "தற்போது வரை விஜய் தலைமையில் கூட்டணி என்பது அமையவில்லை. தனித்துதான் காணப்படுகிறார். திமுக கூட்டணியை வீழ்த்தும் அறவிற்கு விஜய் பலம் பெறவில்லை. வடிவேலு ஷோ நடத்தினால் கூட கூட்டம் கூடும்" என்றார்.

    • மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

    பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுவது தான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம்.

    ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு ஜாய் கிரிசில்டா கூறியிருப்பதாவது:-

    "கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது."

    நான் உள்ளே துடிக்க

    நீ வெளியே தப்பிக்கிறாய்…

    இதுதானா உன் அன்பு அறிமுகம்….???? என்று கூறியுள்ளார். 



    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை முதல் 17-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • நீங்கள் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
    • உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். 

    இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

    "மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம்.

    இன்று இம்பால் மற்றும் சூரசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை!

    864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 இடம்பெயர்ந்தனர்.

    நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை.

    மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக!. உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    நீங்களும் அமித் ஷாவும் காட்டிய திறமையின்மை மற்றும் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.

    வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது.

    மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.

    தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்ததிற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு கூட இல்லை.

    நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள். அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படுபவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்!" என்று தெரிவித்துள்ளார். 

    ×