என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு இ.பி.எஸ். அதிமுக உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - கனிமொழி
    X

    கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு இ.பி.எஸ். அதிமுக உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - கனிமொழி

    • பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
    • வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.

    வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×