என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்திருந்தார்
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

    உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

    ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோ ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை YSR காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

     

    • திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்திருந்தார்.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

    உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

    ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    • பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
    • புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

    இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சில மையங்களுக்கு வினாத்தாள்கள் தாமதமாகச் சென்றது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும். இதற்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    மேலும் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13, 2026 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். 

    இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
    • புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.

    புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .

    அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு மோடி பலியாகி விட்டார். இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் மீது அக்கறை காட்டுகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் எதிர்க்கி றார்கள். எனவே, மோடி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும்.

    கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா.? என்பது யூகமான கேள்வி. ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. பா.ம.க. ஏற்கனவே எடுத்த சோசியல் என்ஜினியரிங் நிலைப்பாட்டால் வி.சி.க.வின் வெளிப்படை யான முடிவை அறிவித் தோம். அந்த முடிவைதான் மறுபடி மறுபடி சொல்கி றேன். இதில் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்ப வில்லை.

    கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும். புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணுசக்தி உற்பத்தியில் விபத்துகள் / போழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அணு உலை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை
    • ன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விசிக, சிபிஐ(எம்), சிபிஐ (எம்.எல்) விடுதலை கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையை விசிக தலைவர் திருமாளவன் வெளியிட்டுள்ளார். அதில், 

    "ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலுக்கு எதிராகவும் 2026 பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள், தொழில்வாரியான சம்மேளனங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம். 

    அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஆதரவாக நான்கு தொகுப்புச் சட்டங்களாக திருத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.

    அதிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தித் துறையில், லாப நோக்கத்துடன் செயல்படும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக "இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதில், அணுசக்தி உற்பத்தியில் விபத்துகள் / போழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அணு உலை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. இது நமது நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் மட்டுமல்லாமல் மனித உயிரை மதிக்காத போக்குமாகும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டியும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும் விபிஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கடுமையான வேலையின்மையால் தவிக்கும் இந்த நேரத்தில், இந்த புதிய சட்டம் உரிமைகள் அடிப்படையிலான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒழித்துக்கட்டி, வேலை அளிப்பதை ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றி, 40 சதவிகித நிதிச் சுமையையும் மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அத்துடன், அறுவடைக் காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது. இது கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் வேலை உரிமையை பறிக்கும் செயலாகும்.

    இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. ஒன்றிய அரசு, விக்சித் பாரத் சிக்க்ஷா அதிஸ்தான்-2025 என்ற சட்ட முன்வடிவையும் நிறைவேற்றியுள்ளது. இது கல்வித்துறை அதிகாரங்களை மத்தியில் குவிக்கவும் பெருமளவில் வணிகமயமாக்கவும் வழிவகுக்கிறது.

    விதை சட்டமுன்வடிவையும், 2025 மின்சார (திருத்த) சட்டமுன்வடிவையும் மோடி அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டால், அவை விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன மின் நுகர்வோர், எளிய மக்கள் மற்றும் நமது நாட்டின் பொது மின்சாரத் துறைக்கு போழிவை ஏற்படுத்திடும். இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களாகவும் அமைகின்றன. மேலும், 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்வது என்ற அமெரிக்கா -இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இறையாண்மை, விவசாயம், பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

    மோடி அரசின் இந்த அனைத்து கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்தி வரும் இயக்கங்களுக்கு வாலிபர், மாணவர், மாதர், மாற்றுத்திறனாளி போன்ற வெகுமக்கள் அமைப்புகளும் தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளன. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் அமைப்புகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

    இந்திய நாட்டின் வளங்களை சூறையாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்கவும் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
    • திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல..தொண்டு" என்றார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது:-

    அரசு ஊழியர்களின் வியர்வை துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சேர்த்த தான் அரசாங்கம், நாணயத்தின் 2 பக்கள் நாம்.

    பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பவர்கள் தான் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு.

    பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது.

    நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும்.

    அரசின் கண்கள் மற்றும் கரங்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது.

    தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டிற்கு திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

    பழைய ஓய்வூதிய திட்டத்ததை முந்தைய அதிமுக ஆட்சி பறித்தது. அரசு ஊழியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது கடந்த அதிமுக ஆட்சி.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை செய்வதை சொல்லி மக்களிடம் பாராட்டு வாங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

    தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

    தவெக தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகியோருக்கு போலீசார் வலைவீசப்பட்டுள்ளது.

    • ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட நீக்குவார்கள்.
    • பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் பாதயாத்திரை நடைபெற்றது. பின்னர் மரக்கடை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு பேசியதாவது:-

     "மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஆனால் நமது மாநிலம் மற்றும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை அவர்கள் ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்குகிறார்கள்.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கி இருக்கிறார்கள். ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட அவர்கள் நீக்குவார்கள். அவர்கள் தமிழகத்தை ஒரு போதும் ஆள முடியாது. திருச்சி மலைக்கோட்டை நகரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நாங்கள் பிடிக்க போகிறோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதற்கான சபதத்தை இன்று ஏற்று இருக்கிறோம். 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதற்காக 13 மாதங்கள் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்ததை போல் இதற்கும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

    "தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது.

    எம்.பி.க்கள் தன்னை தாக்க முயற்சித்தார்கள் என உண்மைக்கு புறம்பான செய்தியை பிரதமர் கூறியுள்ளார். இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை. பிரதமர் மோடி ஏன் இப்படி பேசுகிறார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு பறித்து விட்டது. பட்ஜெட்டில் ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிந்தே தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆட்சியில் பங்கு தருகிறோம் எனக் கூறும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு நாங்கள் என்ன பங்காளிகளா? பங்கு தருவதற்கு என பதில் அளித்தார். 

    • மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார்.
    • ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார்.

    ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னைக்கு வந்திருந்தார்.

    சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

    • ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன.
    • தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறு

    தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

    அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள்.

    அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும். ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.

    எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

    எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அரசின் நிர்வாகத் தோல்விக்கு இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
    • குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.

    தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.

    உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு.' எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சென்னையில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது.
    • சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னையில் இன்று அதிகாலையில் திடீர் பனிமூட்டம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கி இருக்கிறது.

    இது தொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. காலை 5.30 மணியளவில் 1500 மீட்டராக இருந்த பார்வைத்திறன், 6.30 மணியளவில் 350 மீட்டராகவும், 7.30 மணியளவில் 150 மீட்டராகவும் குறைந்தது.

    இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதிக ஈரப்பதம், மிதமான முதல் அமைதியான காற்று நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை பனி உருவாவதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

    பிப்ரவரி மாத இறுதிவரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்த முதல் மிதமான பனி மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×