சென்னையில் இன்று திடீர் பனிமூட்டம் ஏன்?- வானிலை மையம் விளக்கம்

சென்னையில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது.சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்று திடீர் பனிமூட்டம் ஏன்?- வானிலை மையம் விளக்கம்
Published on

சென்னையில் இன்று அதிகாலையில் திடீர் பனிமூட்டம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் விளக்கி இருக்கிறது.

இது தொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை மிதமான முதல் அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. காலை 5.30 மணியளவில் 1500 மீட்டராக இருந்த பார்வைத்திறன், 6.30 மணியளவில் 350 மீட்டராகவும், 7.30 மணியளவில் 150 மீட்டராகவும் குறைந்தது.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிக ஈரப்பதம், மிதமான முதல் அமைதியான காற்று நிலை, இரவு நேர குறைந்த வெப்பநிலை ஆகியவை பனி உருவாவதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

பிப்ரவரி மாத இறுதிவரை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் குறைந்த முதல் மிதமான பனி மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com