என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார்
- ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துளசிராம் (36). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பி.இ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி பாண்டியம்மாள், கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். வேலை இல்லாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியில் இருந்த துளசிராம் பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி உள்ளார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- எடப்பாடியாரின் எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
- அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.
பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது:-
"தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றம், சட்டம், ஒழுங்கு பாதிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 அமாவாசைகளுக்கு பிறகு அதாவது 60 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அ.தி.மு.க ஆட்சி அமையும். சாதாரண மக்களிடமும் எளிமையாக பழகும் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டனர். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். எடப்பாடியாரின் எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டிசம்பர் 19ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
- பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்' (Special Intensive Revision) நிறைவடையும் நிலையில் உள்ளன.
இதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அட்டவணையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
டிசம்பர் 19 - ஜனவரி 18 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பிப்ரவரி 10 வரை, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான சரிபார்ப்பு மற்றும் தீர்வு காணும் பணிகள் நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்யக்கோரி பெறப்பட்ட 34.75 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் பிப். 10ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 90% நிறைவுபெற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 17 அன்று அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
- தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
- காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி.
மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
தி.மு.க. இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி குறித்து மாவட்ட தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் பேசுவது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிரானது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி. தங்களது ஆசையை நிர்வாகிகள் வெளிப்படுத்துவதில் தவறில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பிரதமர் என்டி.ஏ. கூட்டணி என்று கூறுகிறார். மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா பேசி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க.வினர் இதுபோல பேச முடியுமா?
காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.
- தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.
திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வை முறையாக நடத்த முடியாத அவலம் தி.மு.க. ஆட்சியில் உள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.
* தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.
* தி.மு.க. - காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக திட்டங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
- மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ தரப்பில் விசிலுக்கு தடை குறித்த அதிகாரப்பூர்வ விதிமுறை எதுவும் இல்லை. எனினும், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், காவல் துறை மற்றும் மைதான நிர்வாகம் தரர்பில் இப்படி தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
- நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
சேலம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.
சீலநாயக்கன்பட்டியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது வாகன நிறுத்த போதிய இடம் இல்லை என்றும், கூடுதலாக இடம் தேர்வு செய்யும் படியும் கூறினர். மேலும் தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டப்படி வருகிற 13-ந்தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13-ந்தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
- இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது.
- போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குளறுபடிகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். இன்று நடைபெற இருந்த குருப் 2, 2A தேர்வுக்கு சென்னை, அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் தேர்வர் எண் இல்லை என்பன உள்ளிட்ட புகார்களை கூறி சுமார் 500 தேர்வர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கரோனா தொற்று காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்புகின்றன. ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் தேர்வானது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் வெளியாகி மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.
கடந்த 2023 மே மாதம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் தனியார் கல்லூரி மையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தேர்வு முடிந்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை உள்ளே விட அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.
பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இது குறித்த விசாரணை நடைபெற்றது. இது குறித்து சட்டமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பின் அதன் முடிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
இளைஞர்களின் ஒரே நம்பிக்கை போட்டித்தேர்வின் மூலம் அரசுப்பணியில் சேர்வது. அதற்கான நுழைவு வாயில்களில் ஒன்றாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி காட்டும் அலட்சியப்போக்குக்கு அளவே இல்லை என்பதற்கு இன்றைய குளறுபடியும் உதாரணம். தொடர்ந்து போட்டித்தேர்வில் அரசு பணியாளர் தேர்வாணையம் காட்டும் அலட்சியத்தை புரிந்து கொள்வது என்பது போட்டித்தேர்வின் கேள்விகளைவிட கடினமானதாகத்தான் உள்ளது.
இன்று நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்து இளைஞர்களுக்கு தேர்வாணையம் மீது நம்பிக்கை பொய்த்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட…!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது.
- சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வருகை தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.
தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதே சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறி விட்டது. பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், அது தி.மு.க.விற்கு சாதகமாக போனது. இம்முறை அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அ.ம.மு.க. இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு தி.மு.க.விற்கு கிடைக்காது
எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
திடீர் சாம்பார், துரித உணவுகளை போல, சில கட்சிகள் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்று கட்சியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வேட்பாளர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கை கூட்டணி என்கிறார்கள். கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு தனித்தனி கட்சி தேவை இல்லை. காங்கிரசை எதிர்த்து தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்றார்.
- திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வருகை.
- வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது சென்னை வந்துள்ளார்.
ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
- தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.
- தவெக நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியது பரபரப்பி ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.
அப்போது பேசிய செங்கோட்டையன், "விசில் அடிச்சிட்டு போகட்டும் விடுங்க... ஒன்னும் பண்ண முடியாது போயிடலாம் வாங்க... விசில் அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
- தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் தி.மு.க. அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட தி.மு.க. அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






