என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.
    • விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார்.

    நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி ஆய்வு குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்து அதன் அறிக்கையை வாங்கியது. ஆனால் வழக்கம்போல் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தாமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

    கடந்த 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் நலம் காக்க அவர்கள் உற்பத்தி செய்த நெல்களை வாங்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உருவாக்கினார். தற்போது அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது எதுவும் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார்.

    கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதி விவசாயிகளை சந்தித்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கருணாநிதி முதலமைச்சராக ஆன உடன் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் வழியிலே தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.

    அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 1.79 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே 1.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆண்டுகளில் ரூ.1145 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ரூ.2042 கோடி ஊக்கத்தொகை வழங்கி சாதனை படைத்தது. இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி பாதுகாவலனாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    • இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    • பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    திருப்பத்தூர்:

    மறைந்த இலங்கை முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.எம்.ஆறுமுகம் தொண்டைமான்-ராஜலட்சுமி தம்பதியினரின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டமானுக்கும் திருப்பத்தூர் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ராமேஸ்வரன்-பிரியா தம்பதியின் மகள் சீதை ஸ்ரீ நாச்சியாருக்கும் திருமணம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் மற்றும் இலங்கை உவாமா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டைமான், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் சமூக அமைப்பு நிர்வாகிகள் என பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2333 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    உப்பார்பட்டி பகுதியில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 137 அடியை எட்டியது. அணையில் 6370 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அக்டோபர் மாதத்தில் 138 அடிவரைதான் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் கேரள பகுதிக்கு வீணாக உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 61.19 அடியாக உள்ளது. அணைக்கு 100 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2099 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3834 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி அருகே வருசநாடு வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது படிக்கட்டுகள், தடுப்புகள் சேதமடைந்தது. மேலும் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் இன்று காலை கூடுதல் தண்ணீர் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் மழை காலங்களில் நீர்நிலைகளுக்கு செல்வததை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிபட்டி 2.8, அரண்மனைபுதூர் 2.2, வீரபாண்டி 3.2, பெரியகுளம் 9.6, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10.6, வைகை அணை 2, போடி 5.8, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 6.8, பெரியாறு அணை 17, தேக்கடி 26, சண்முகாநதி 7.4 என மொத்தம் 110.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
    • அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.

    காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. மீது த.வெ.க. தலைவர் விஜய் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    இதுதொடர்பாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது, அண்ணா முதலமைச்சராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை.

    * மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.

    * முதல் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார்.

    * தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.

    * அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.

    * கட்சி பதவிக்காக கொள்ளை அடிப்பதாக த.வெ.க.வினரே குற்றம்சாட்டுகின்றனர்.

    * மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்?

    * தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி என்ன பேசியிருக்கிறார் விஜய்?

    * பா.ஜ.க.வின் அடிமையாக விஜய் உள்ளார் என்றார்.

    * தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார்.

    * கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார். 

    • விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
    • தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தி.மு.க. மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

    மேலும் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் என்றாலே பட்டு என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் இன்றைய நெசவாளர் நிலை வறுமை, கந்துவட்டி கொடுமையாக உள்ளது.

    * இந்த அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களே அதேபோல் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.

    * உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு கட்சி சிண்டிகேட் அமைத்து கொள்ளை அடிப்பதை பார்த்திருக்கிறீரா?



    * தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.

    * குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

    * இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்... ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்...

    * பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே... என்று கூறி விட்டு சிரித்தார்.

    * பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி?

    * வெளியில் செல்ல அனுமதி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியில் வருவோம் என்றார்.

    • ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
    • எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-

    * அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என பேசினார்.

    * திமுக எம்எல்ஏ எழிலனின் ஆதரவு குரல் போன்ற குரல் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும்.

    * கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.

    * நடிகர் கட்சி... நடிகர் கட்சி என்று சொனன் ஒருத்தர் எம்.ஜி.ஆர். கூடவே போய் சேர்ந்துவிட்டார்.

    * ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.

    * எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.

    * தற்குறி என நீங்கள் கூறுபவர்கள் தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுத போகிறார்கள்.

    * த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி என்றார். 

    • சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
    • அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து பேசியதாவது:-

    * உங்கள் அரசவைப் புலவர்கள் யாராவது இருந்தால் கைக்குட்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்.

    * சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.

    * நாம் ஆட்சிக்கு வந்தா... அது என்ன வந்தா... வருவோம்... மக்கள் நம்மை கண்டிப்பாக வரவைப்பார்கள்.

    * மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும்.

    * வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.

    * வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.

    * வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும்.

    * சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். 

    • மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.
    • 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விமர்சித்த விஜய் தொடர்ந்து பேசியதாவது:-

    * த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தானே...

    * விமர்சனம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அலறினால் எப்படி?

    * காஞ்சி மக்களின் உயிரோடு கலந்துள்ளது பாலாறு.

    * பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது.

    * 22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளை அடித்து காஞ்சிபுரத்தில் ஜீவநதியான பாலாற்றை அழித்துவிட்டார்கள்.

    * மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.

    * 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    * அரசால் வேறு ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையத்தில் கட்டிக்கொடுக்க முடியாதா?

    * பரந்தூர் விவகாரத்தில் விவசாயிகள் பக்கம் தான் த.வெ.க. நிற்கும்.

    * நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால் அவதிபடுகின்றனர்.

    * மக்களை பற்றி யோசிக்கவே தி.மு.க.வினருக்கு நேரம் இல்லை என்றார். 

    • அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?
    • மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், 'நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே கண்ணா இருந்தார் என எம்.ஜி.ஆர். பாடலை பேசியதாவது:-

    * அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?

    * மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    * தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீது எந்த வன்மமும் இல்லை.

    * மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

    * மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    * த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர்.

    * பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா?

    * கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? என்று பேசி வருகிறார்.

    • இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.
    • காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் வேதனைக்குள்ளான விஜய் தனது பிரசார பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.

    ஒரு மாதம் கழித்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதன் பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இருப்பினும் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே இருந்து வந்தன. பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள். இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதற்காக சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கூட்ட அரங்கில் உள் அரங்கு நிகழ்ச்சியாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய்யை சந்தித்து பேசுவதற்காக 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

    இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். விஜய்யை சந்திக்க வருபவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

    இதன்படி தங்களது செல்போன் மூலமாக கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே விஜய்யை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். இதற்காக இன்று காலையிலேயே கூட்டம் நடைபெறும் கல்லூரிக்கு அவர் வருகை தந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டார்.

    கரூரில் செப்டம்பர் 27-ந்தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் பொதுமக்களை சந்திக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு விஜய் மீண்டும் இன்று மக்களை சந்தித்தார். இதற்காக காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதனை தொடர்ந்து இதுபோன்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலமாக தேர்தல் வியூகங்களையும் வகுத்து உள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கி உள்ளனர்.

    • ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×