என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பராசக்தி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை
- விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"பாஜகவை எதிர்த்து பேசவில்லை என திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கான சான்றிதழ் ஒன்றிய அரசிடம் உள்ளது. எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என நம் தலைவர் கூறினார். தைரியமாக இன்று இந்தியாவில் பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் எங்கள் தலைவர்.
அந்தநேரத்தில் மற்றொரு படம் (பராசக்தி) ரிலீஸ் ஆனது. அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அந்தளவு மக்கள் தூக்கிப்போட்டு விட்டார்கள். ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்பதால் ஒருவர்கூட தியேட்டர் போகவில்லை. முதலமைச்சரின் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால் எங்கள் தலைவர் இன்றுவரை நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். திமுக படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது, விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை அரசியல் தலைவர்கள் நிப்பாட்ட வேண்டும். கரூர் சம்பவத்திற்காக மட்டும் விஜய் கண்கலங்கவில்லை. நேற்று 5 ஆயிரம் பேருக்குத்தான் காவல்துறை அனுமதி அளித்தது. சாலையில் 2 லட்சம் பேர் நின்றார்கள். அவர்களை பார்க்கமுடியவில்லை என்ற வலியில் கண்கலங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக பார்த்து பயந்த ஒரே இயக்கம் தவெக. நம் தலைவர் விஜய். அதனால்தான் இவ்வளவு நெருக்கடி." எனப் பேசினார்.
- திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது.
- வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"வில்லிவாக்கத்தில் மருத்துவமனை, கல்லூரி, அரசுப்பள்ளி இல்லை. மழைநாட்களில் சாக்கடைநீர் வருகிறது. 5 வருடமாக எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. நாளை அவர் காணவில்லை என போஸ்டர் ஒட்டுவார்கள்போல. வில்லிவாக்கத்தில் தி.மு.க. என்ற கட்சியும் இல்லை. திமுகதான் இல்லை, அதிமுக எங்கு எனக்கேட்டேன். அது பேக்கேஜ் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது எனக்கூறுகிறார்கள்.
இங்கு திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது. இந்தத் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலுக்காக நம் தலைவர் கட்சியை உருவாக்கவில்லை. 20 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த மாற்றமும் வரவில்லை. வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார். அந்த தொகுதியை மாற்றுவார். ஏழைக்கு ஒரு மருத்துவமனை, முதலமைச்சருக்கு ஒரு மருத்துவமனை என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மருத்துவமனை என்ற நிலையை உருவாக்குவார். இதற்காகத்தான் கட்சித் தொடங்கியுள்ளார்.
இன்று ரெட் ஜெயண்ட் ரஜினி, கமலை வைத்து ஒரு படம் எடுத்துள்ளது. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? எல்லாம் கொள்ளைப்பணம். நீங்கள் அரசை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். எங்கள் தலைவர் தொழிலைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இதுதான் வித்தியாசம்.
இன்று புரட்சித்தலைவி பிறந்தநாள். அவர் லேடியா? மோடியா? என்று பாஜகவை எதிர்த்து நின்றார். அந்தக் கொள்கையை கடைசிவரை பிடித்து ஜெயித்தார். எல்லோரும் ஏன் நம் தலைவர் அதிமுகவை திட்டவில்லை எனக் கேட்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக வந்து வெகுநாட்கள் ஆகிறது.
அங்கு இருப்பது 10 பேர்தான். அவர்களும் டெல்லி சென்றுவிட்டார்கள். உண்மையான அ.தி.மு.க. இங்கு உள்ளது. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், வி.எஸ்.பாபு, தனபால் மகன் ஆகியோர் இங்கு உள்ளனர். திமுகவின் தீயசக்தியை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான தலைவர், நம் தலைவர் என அதிமுக உணர்ந்ததனால்தான் இங்கு மாறியுள்ளனர். அப்போது புரட்சித்தலைவி அம்மாவையும், அவர் தொண்டர்களையும் நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்?" எனப் பேசினார்.
- மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
- ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை சிறையில் இருக்கும் 116 தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை, தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது.
இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப் போராடுவோம்.
- நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்; நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம்.
- இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
நத்தம்:
கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101). வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நல்லகண்ணுவுக்கு பல்துறை மருத்துவ நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நேற்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நல்லகண்ணுவுக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை, மருந்துகள், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
- அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
- தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னையில் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
- வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்துவிட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார்.
நீண்ட நாட்களாக காத்திருந்த காங்கிரஸுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் நேற்று முன்தினம் (பிப்.22) தொடங்கியது தி.மு.க.
தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இந்தக் குழு முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முஸ்லீக் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. 2 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோருகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியுள்ளது. தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்து ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் 45 இடங்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் 45 இடங்களை கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களை கொடுக்க முன்வர தயங்குகிறது. காரணம் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் அதே வேளையில், தி.மு.க. தனித்துப் பெரும்பான்மை பெறும் வகையில் சுமார் 165-170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை காங்கிரஸின் உள் மதிப்பீட்டின்படி, தி.மு.க. 2021 இல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்று 40 தொகுதிகளில் தோல்வியடைந்தது. பெரும்பாலும் இந்த 40 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியடைந்த தொகுதிகளில் குறைந்தது 20 இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 இடங்கள் அல்லது அதற்குச் சற்று கூடுதலாக (27-28) வழங்கவே திமுக விரும்புவதால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
- திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கூடலூர்:
இந்து மத திருமண சடங்குகளால் ஈர்க்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தமிழக எல்லையான குமுளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆஸ்கார் (வயது47). இவர் கடந்த 2010 முதல் ஆண்டுக்கு 2 முறை கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். அவ்வாறு வந்த போது கேரளாவில் வர்க்கலா மற்றும் தேக்கடி ஆகிய இடங்கள் மிகவும் பிடித்துப்போனது.
மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வந்தார். இந்து மத சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். இதனையடுத்து ஆஸ்கார் மூலமாக இந்து மதச் சடங்குகளைப் பற்றி அறிந்து கொண்ட செலியாவும் (37), கடந்த 3 ஆண்டுகளாக தனது காதலர் ஆஸ்கார் உடன் கேரளா மற்றும் தமிழ்நாட்டு கோவில்களுக்கும் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தவும் திட்டமிட்டனர். இதை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள துர்கா கணபதி பத்ரகாளி கோவிலில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், ஆஸ்கார் மணமகள் செலியாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணச் சடங்குகளை பூசாரி கண்ணன் முன்னின்று நடத்தினார்.
கோவில் தலைவர் ரவீந்திரன் நாயர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். தங்களின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த வெளிநாட்டு தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
- கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவருக்கு கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடு ஷோ'வாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
தொடர்ந்து பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1கோடியே 45 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.






