search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தி.மு.க.வோடு காங்கிரஸ் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மேதினவிழா பொதுக்கூட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்றது. நகர செயலாளர் பொன்சக்தி வேல் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டிராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தொழிலாளர்களின் வாழ்வின் மறுமலர்ச்சி தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினத்தை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு. நலிவடைந்த தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிதி கொடுக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    எப்போது ஆட்சி கவிழும், எப்போது ஆட்சியை பிடிக்கலாம் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.

    மக்கள் பற்றியோ, தொழிலாளர்கள் பற்றியோ ஸ்டாலின் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சராக எப்போதும் வரமுடியாது. அதற்குறிய வாய்ப்பு அவருக்கு இல்லை. அவர் கட்சிக்கு அவரால் தலைராக ஆக முடியவில்லை. இன்றுவரை செயல் தலைவராகத்தான் உள்ளார். தலைவராக வரமுடியாதவர் எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரமுடியும்?

    ஜெயலலிதா போட்ட வழக்கில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைக்கு மத்திய அரசிற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதே இடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் மத்திய அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பார். மத்தியில் உறவிற்கு கை கொடுக்கும் கட்சியாகவும் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    பிரதமர் வந்தால் கருப்பு கொடி காட்டுகின்றனர். பிறகு பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஸ்டாலினுக்கு காவிரியில் தண்ணீர்வர வேண்டும் என்பதில் அக்கறை இல்லை.

    காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் நடத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்செயல்படுகின்றார்.

    14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் கூட்டணியில் இருந்த போதும் அமைச்சர்களாக இருந்த போதும் காவிரி பிரச்சனையை பற்றி தி.மு.க. கவலைப்படவில்லை. ஆட்சியில் இருந்த போது எதுவும் செய்யாமல் இன்றைக்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி வருகிறது.

    ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்ற வகையில் தி.மு.க.வின் அரசியல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்வது வேடிக்கையாக உள்ளது. கர்நாடகாவில் நமக்கு காங்கிரஸ் கட்சிதான் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திர பிரபா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன் சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
    Next Story
    ×