என் மலர்
விளையாட்டு
- சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் அடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.
தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் எடுத்துவிட்டு அடுத்த 2 போட்டிகளில் டக் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்துள்ளார்.
- இரு அணிகள் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்த போட்டியில் ரமன்தீப் சிங் இந்திய அணியில் அறிமுகமாகிறார்.

இந்திய அணியின் பிளேயிங் XI:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி
- ரஞ்சி கோப்பையில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
- முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஞ்சி கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பேட்டிங் செய்த கோவா அணி 54 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்களை குவித்துள்ளது.
- ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை.
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ரோகித் சர்மாவை அட்டாக் செய்வார்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.
ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருவரும் கம்பேக் கொடுப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஆலோசனை வழங்கியுள்ளார்.
யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரட் லீ, "தங்கள் பேட்டில் இருந்து தொடர்ந்து ரன்கள் வராவிட்டால் வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் கிரிக்கெட்டில் இருந்து விலகி புத்துணர்ச்சியோடு இந்த டெஸ்ட் தொடருக்கு திரும்ப வேண்டும்.
ஏனெனில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ரோகித் சர்மாவை அட்டாக் செய்வார்கள். ரோகித் விளையாடுவதை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஆகவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட இருவரும் தயாராக இருப்பார்கள என்று நினைக்கிறன்" என்று தெரிவித்தார்.
- குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.
- பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளராக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்தமுறை கோப்பையை வென்று அசத்தியது.
புதிய பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பை குஜராத் அணி அறிக்கையாக வெளியிட்டது. அதில், "வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு டைட்டன்ஸ் தயாராகி வரும் நிலையில், பேட்டிங் நுட்பங்கள், உத்திகள் குறித்த பார்த்திவின் நுண்ணறிவு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்."
"அவரது கூர்மையான கிரிக்கெட் திறன், இளம் திறமைகளுக்கு வழிகாட்டும். இதோடு பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தி, வீரர்களின் மேம்பாடு, செயல்திறனுக்கு அவர் பங்களிப்பார்," என்று குறிப்பிட்டுள்ளது.
குஜராத் அணியில் கேரி கிர்ஸ்டெனுக்கு மாற்றாக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேரி கிர்ஸ்டென் குஜராத் அணியில் இருந்து விலகி பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.
- பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதல் இடம் பிடித்துள்ளார்.
- பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 2-ம் இடமும் சுப்மன் கில் 3-ம் இடமும் விராட் கோலி 4-ம் இடமும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 2-ம் இடமும் தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ் 3-ம் இடமும் இந்தியாவின் குல்தீப் யாதவ் 4-ம் இடமும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பும்ரா 6-ம் இடமும் முகமது சிராஜ் 8-ம் இடமும் பிடித்துள்ளனர்.
- விராட் கோலி கடந்த சில வருடங்களில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவர் ஃபார்மின்றி தவித்து வருகிறார்- பாண்டிங்
- ரிக்கி பாண்டிங் முதலில் ஆஸ்திரேலியா அணி மீது கவனம் செலுத்தட்டும் என கம்பீர் பதில் கொடுத்திருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இந்தியா இழந்ததோடு, முதன்முறையாக 2 போட்டிக்கு அதிகமான போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றும் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரை 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதற்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.
அப்போது ரிக்கி பாண்டிங் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை விமர்சிப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியா அணி மீது கவனம் செலுத்தவும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவுதம் கம்பீருக்கு ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். "என்னுடைய கருத்துக்கு கவுதம் கம்பீரின் எதிர்வினையை படித்து ஆச்சர்யப்பட்டேன். இருந்தபோதிலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், மிகவும் எளிதாக நிதானத்தை இழக்கும் கேரக்டர் (prickly character). ஆகவே, திருப்பிச் சொன்னதில் எனக்கு என்ற ஆச்சர்யமும் இல்லை" என்றார்.
விராட் கோலி கடந்த சில வருடங்களில் 2 இரண்டு டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். மற்றொரு வீரராக இருந்திருந்தால் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கமாட்டார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
- இதற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லீ ஐ.சி.சி.யின் விதி 2.2ஐ மீறியுள்ளார். அந்த விதியின்படி, "சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தின் பொருட்களையோ அல்லது கிரிக்கெட் உபகரணங்களையோ, ஆடைகளையோ அவமதித்தால் அபராதம்" என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரீஸ் டாப்லீ நாற்காலியை எடுத்து படிக்கட்டின் கைப்பிடிகளை ஓங்கி அடித்தார்.
இதற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை ரீஸ் டாப்லீ ஏற்றுக்கொண்டார். ஐ.சி.சி.யின் லெவல் 1 விதி மீறினால் குறைந்தபட்ச அபராதமே விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப் படும்.
- நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன்.
- நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்திற்கு முன்பு அந்த அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. எனவே கே. எல். ராகுல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கூறும் போது தனக்கு சுதந்திரம் வேண்டும், அணியில் நல்ல சூழ்நிலை வேண்டும் என்றும், இந்திய 20 ஓவர் அணியில் தனக்கு வாய்ப்பு பறிபோக லக்னோ அணியில் சரியான சூழலில் தான் விளையாடாதது தான் காரணம் என்றும் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
2025 ஐ.பி.எல். போட்டியில் விருப்பப்படும் ஐ.பி.எல். அணியில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன். மெகா ஏலத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். எனது சொந்த மைதானமான பெங்களூருவில் ஆர்.சி.பி. அணிக்காக சின்னசாமி ஸ்டேடியத்தில் சொந்த ரசிகர்கள் முன்பு விளையாடுவற்காக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அன்பும், மரியாதையும் கொண்ட அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆர்.சி.பி. அணியினர் விளையாடி இருந்ததை மிகவும் ரசித்தேன். பெங்களூரு தான் எனது சொந்த ஊர். அங்குள்ளவர்களுக்கு என்னை உள்ளூர் பையன் என்று தெரியும். அங்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
நான் யாரிடமும் சென்று கேப்டன் பதவியை கேட்க மாட்டேன். நான் அதற்கு தகுதியானவன் என்று நீங்கள் கருதி அதை வழங்கினால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் ஒரு நல்ல சூழலை கொண்ட அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அந்த சூழலில் தான் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். மதிக்கப்படுவீர்கள்.
தொடக்க வீரர், மிடில் ஆர்டர், பின்கள வரிசை, விக்கெட் கீப்பிங் என்று எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் எப்போதும் சரியாக இருப்பேன்.
இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
32 வயதான பெங்களூரை சேர்ந்த கே.எல். ராகுலின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை 2013-ல் தொடங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2014, 2015-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆடினார். 2016-ல் மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு வந்தார். அப்போது அவர் 397 ரன் குவித்து பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக நிகழ்ந்தார். பின்னர் பஞ்சாப் அணிக்கு சென்றார். அங்கு கேப்டன் பொறுப்பு வகித்தார்.அங்கிருந்து தான் லக்னோ அணி அறிமுகம் ஆனபோது அந்த அணிக்கு சென்றார்.
தற்போது கே.எல்.ராகுல் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்ப இருக்கிறார். அந்த அணி நிர்வாகம் விராட்கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ.5கோடி) ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்து இருக்கிறது.
- முதல் கால் இறுதியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்- மணிப்பூர் அணிகள் மோதின.
- இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்ததால் ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் , உத்தரபிரதேம் , ஒடிசா, மராட்டியம், அரி யானா, மணிப்பூர் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய முதல் கால் இறுதியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்- மணிப்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. பஞ்சாப் அணியில் ரவ்நீத் சிங் 2 கோலும் (24 மற்றும் 59-வது நிமிடம்), மனீந்தர் சிங் (18), ஒரு கோலும் அடித்தனர். மணிப்பூர் அணிக்காக சிரில்லுகன் தொடர்ந்து 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் (14, 36 மற்றும் 51-வது நிமிடம்) சாதனை புரிந்தார்.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மணிப்பூர் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பஞ்சாப் அணி வெளியேறியது.
இன்று நடைபெறும் மற்ற கால் இறுதி ஆட்டத்தில் அரியானா-மராட்டியம், தமிழ்நாடு-உத்தரபிரதேசம், கர்நாடகா-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி விளையாடினர்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் இணையிடம் தோற்று நடையை கட்டியது.
இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.
- எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை.
- இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் வாசிம் அக்ரம். ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த முதல் வீரர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி வர்ணனையின் போது தனது பூனை குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆஸ்திரேலியாவில் எனது பூனைக்கு முடிவெட்ட ஒரு கடைக்கு சென்றேன். முதலில் மயக்க மருந்து கொடுத்தனர். பிறகு உணவு கொடுத்தனர். இதற்காக பாகிஸ்தான் பணம் ரூ. 1.83 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்த வேண்டியது இருந்தது. எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம் என்றார்.
இதைக் கேட்ட சக வர்ணனையாளர்கள் நம்ப முடியாமல் வியந்தனர். உடனே பணம் செலுத்தியற்கான ரசீதை காண்பித்தார். அதில்,' பூனையின் மருத்துவ பரிசோதனை (ரூ. 20,000), மயக்க மருந்து செலவு (ரூ. 56,000), இருதய துடிப்பு சோதனை (ரூ. 46,000) என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 மட்டும் தான் செலவு என இருந்தது. இதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.






