என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் அணி நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் புள்ளிகளை எடுத்தன.

    இறுதியில், ஜெய்ப்பூர் அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 4ம் நிலை வீரரான ரஷியாவின் மெத்வதேவ், 7-வது நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • முதல் இரு போட்டிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2வது போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசென் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள்.

    இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்.

    இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள். சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும்.

    நான் இப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை. கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லா.

    தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்.

    டி20 கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என தெரிவித்தார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.
    • ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி அக்சர் பட்டேலை ரூ.16.50 கோடிக்கும் குல்தீப் யாதவை ரூ.13.25 கோடிக்கும் தென் ஆஃப்ரிக்க வீரர் ஸ்டப்சை ரூ.10 கோடிக்கும் அபிஷேக் போரெலை ரூ.4 கோடிக்கும் என மொத்தம் நான்கு பேரை ரூ.47 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. டெல்லி அணியின் கையில் 73 கோடியும் 2 RTM கார்டுகளும் கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.
    • இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.

    பாட்னா:

    8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் தென் கொரியாவுடன் இன்று மோதியது. இதில் இருதரப்பினரும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்தியா தரப்பில் தீபிகா இரு கோல்களும், சங்கீதா குமாரி ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற பங்காற்றினர்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்துடன் நாளை மறுதினம் மோத உள்ளது.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    சிட்னி:

    பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித்தாள்களில் இந்தியாவில் பேசப்படும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் அச்சிட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவின் டெய்லி டெலிகிராப் நாளிதழில், வரவிருக்கும் தொடரின் ஈர்ப்பைப் படம்பிடித்து காட்டும் வகையில், யுகங்களுக்காக போராடுங்கள் (யுகோன் கி லடாய்) என்கிற இந்தி தலைப்புடன் கோலியின் பெரிய புகைப்படத்தை அச்சிட்டுள்ளது. இதேபோல், ஹெரால்ட் சன் என்கிற நாளேடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலியின் வாழ்க்கைப் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.

    மேலும், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின்பக்கங்களை அலங்கரிக்கிறார்.

    தி ஹெரால்டு சன் முழு பக்கத்தையும் ஜெய்ஸ்வாலுக்கு ஆங்கிலத்திலும், பஞ்சாபியிலும் தி நியூ கிங் என தலைப்பு போட்டுள்ளது.

    டெய்லி டெலிகிராப், வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு இந்தியாவின் மிகவும் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் என்று குறிப்பிடுகிறது

    • வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    நியூயார்க்:

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

    இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.

    போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 7-ம் இடம் பிடித்தவரும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார். இதில் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    • அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலி வென்றார்.
    • சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் பெற்றுள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

    ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்கள் விவரங்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர்ரும் வென்றுள்ளனர்.

    • இந்தியாவில் வெளியிடுவதற்காக அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
    • மிஸ்டர் பீஸ்ட்-இடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    உலக அளவில் மிகப்பெரிய யூடியூபர்களான மிஸ்டர் பீஸ்ட், லோகன் பால மற்றும் கேஎஸ்ஐ இந்தியா வந்துள்ளனர். இந்த மூவரின் பிரான்டுகள்- ஃபீஸ்டபில் மற்றும் பிரைம் ஆகியவற்றை இந்தியாவில் வெளியிடுவதற்காக அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

    மிஸ்டர் பீஸ்ட் இந்தியா வந்ததில் இருந்து அவர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிாமில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை ஃபாளோ செய்த மிஸ்டர் பீஸ்ட்-இடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது உங்கள் வீடியோவில் விராட் கோலியை எதிர்பார்க்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு கமென்ட் செய்த மிஸ்டர் பீஸ்ட், "உங்களுக்கு மிஸ்டர் பீஸ்ட் வீடியோவில் விராட் கோலி இடம்பெறுவதை பார்க்க வேண்டுமா?" என்று குறிப்பிட்டார். இவரது இந்த கமென்ட் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    • முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • பார்டர் கவாஸ்கர் தொடரில் முகமது சமி இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நாளை நடைபெறும் ரஞ்சி போட்டியில் முகமது சமி விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்துக்கு எதிராக நாளை தொடங்கும் ரஞ்சி போட்டியில் ஷமி களமிறங்குவார் என பெங்கால் அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் முகமது சமி இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முழுமையாக உடல்தகுதி பெறாததால் அந்த தொடரில் இடம்பெறவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. 

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல்முறையாக பாகிஸ்தானில் நடைபெற்றவுள்ளது.
    • பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி அறிவித்துவிட்டது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் 2025-ல் நடக்கிறது. முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர் ராவல் பிண்டியில் நடைபெறுகிறது.

    இதில் இந்தியா, போட்டியை நடத்தும். பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (பி பிரிவு) ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.

    பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது. இதை கைவிட பாகிஸ்தான் கிரிக்கெட வாரியம் ஐ.சி.சி.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா மோதிய ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மோதும் போட்டிகளை துபாயில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லையென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம், சாம்பியன்ஸ் டிராபி தொடரை வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி முடிவெடுத்தால் தொடரில் இருந்தே விலக பாகிஸ்தான் அணி முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

    ×