என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள்.
    • கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பார்ம் பெரிய அளவில் இல்லை. அவர்களது பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

    • இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
    • என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுவிங் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    • அவர்களது அணியில் எப்போதும் சுவிங் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தனது கிரிக்கெட் பயணத்தை அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். 188 டெஸ்டில் 704 விக்கெட் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முரளிதரன், 'வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனை சி.எஸ்.கே. ஐபிஎல் ஏலத்தில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுவிங் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவர்களது அணியில் எப்போதும் சுவிங் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அதனால், ஜேம்ஸ் ஆண்டர்சனை சி.எஸ்.கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அது எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஐபிஎல் மெகா ஏலம் வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் சவதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட வீரகள் ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

    • டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்து சாதனை.
    • சச்சின் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும் அடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 77 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

    குர்பாஸ்க்கு நேற்றுடன் 22 வயது 357 நாட்கள் முடிவடைந்தது. இதன்மூலம் இளம் வயதில் 8 சதங்களை நிறைவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    தென்ஆப்பிரிக்காவின் டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    சச்சின் தெண்டுல்கர் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும், பாபர் அசாம் 23 வயது 280 நாட்களிலும் 8 சதங்களை எட்டியிருந்தனர்.

    அதிக சதங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முகமது ஷேசாத் 6 சதங்கள் அடித்துள்ளார். குர்பாஸ் வங்கதேசத்திற்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஷார்ஜா மைதானத்தில் நேற்றைய சதம் அவரின் 3-வது சதம் ஆகும்.

    • அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது.
    • செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அதிரடி தொனியில் வெளிப்படையாக பதில்கள் அளித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பகிரங்கமாக சாடினார்.

    இந்த நிலையில் கம்பீருக்கு பொதுவெளியில் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் அவரை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுப்பாதீர் என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தள பதிவில், 'கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது. அவர் அணிக்கு பின்னணியில் இருந்து மட்டும் வேலை பார்க்கட்டும்.

    செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அகர்கர் ஊடகத்தினரை எதிர்கொள்வதில் திறமையானர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார்.
    • அபாரமான பேட்டிங் திறமையால் ஆயுஷ் மத்ரே, டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.

    அடுத்த ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் சீசனுக்கு பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் வைத்து மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த முறை மெகா ஏலம் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் எந்த மாதிரியான வீரர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என திட்டம் தீட்டி வருகின்றன.

    அந்த வகையில், மும்பையை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஒருவர் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே, தனது அபாரமான பேட்டிங் திறமையால் டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் 5 ஆட்டங்களில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

    தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே, சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மின்னஞ்சல் மூலம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஆயுஷ் மத்ரேவை பயிற்சி ஆட்டங்களில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டு உள்ளார்.

    இரண்டாவது கட்ட ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் ஆயுஷ் மத்ரே சில நாட்கள் டோனியின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் ஐபிஎல் மெகா ஏலத்திலும் ஆயுஷ் மத்ரேவை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முயற்சிக்கும்.

    இது குறித்து பேசிய சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னையில் பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ள ஆயுஷ் மத்ரேவுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அணியில் பல இளம் வீரர்களுக்கு டோனி பயிற்சி அளித்து வருகிறார். 

    • லக்‌ஷயா சென் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.
    • புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    சமீபகாலமாக தனது சிறந்த நிலைக்கு திரும்பும் முயற்சியில் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த சிந்து அண்மையில் தனது பயிற்சியாளர் குழுவை மாற்றினார். புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.

    அவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் சவாலை தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியுடன் மோதுகிறது.

    ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), கோடாய் நராவ்கா (ஜப்பான்), பெண்களில் ஆசிய சாம்பியன் வாங் ஷி யி (சீனா), அகானே யமாகுச்சி (ஜப்பான்) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.

    • பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி அறிவித்துவிட்டது.
    • இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகி விடுவதாக கூறியுள்ளது.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர் ராவல் பிண்டியில் நடைபெறுகிறது.

    இதில் இந்தியா, போட்டியை நடத்தும். பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (பி பிரிவு) ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.

    பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது. இதை கைவிட பாகிஸ்தான் கிரிக்கெட வாரியம் ஐ.சி.சி.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா விளையாட மறுப்பதால் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் இழக்கிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை ஐ.சி.சி. அல்லது ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்துமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா மோதிய ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் இருந்தது வாபஸ் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    • 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
    • ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர்.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் 48-39 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.

    • முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் விலகியுள்ளார்.

    • சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
    • 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா தரப்பில் சங்கீதா குமாரி 2 கோல்களும், பிரீத்தி துபே மற்றும் உதிதா தலா ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற பங்காற்றினர்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவுடன் நாளை மோத உள்ளது.

    • 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
    • முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ×