என் மலர்
விளையாட்டு
- சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் நடந்தது.
- இதில் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது.
இதில் 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
டைபிரேக்கர் முறையில் நடந்த இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோனை அரவிந்த் வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
- ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா-மிசோரம் அணிகள் மோதின.
- அரியானா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை:
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு (சி பிரிவு), கர்நாடகா (டி), பஞ்சாப் (ஏ), உத்தரபிரதேம் (எப்), ஒடிசா (இ), மராட்டியம் (ஜி) ஆகிய 6 அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
இன்று காலை 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஹரியானா-மிசோரம் அணிகள் மோதின. இதில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 'ஹாட்ரிக்' வெற்றி இதுவாகும். இமாச்சல பிரதேசத்தை 12-1 என்ற கணக்கிலும், தெலுங்கானாவை 5-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் ஹரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதியில் நுழையும் கடைசி அணி இன்று மாலை தெரியும். 'எச்' பிரிவில் உள்ள மணிப்பூர், பெங்கால் இடையே போட்டி நிலவுகிறது.
நாளை ஓய்வு நாளாகும். 10-ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-உத்தரபிரதேசம், ஹரியானா-மராட்டியம், கர்நாடகா-ஒடிசா அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி யாருடன் மோதும் என்று இன்று மாலை நடைபெறும் போட்டி முடிவில் இருந்து தெரியவரும்.
- தக்கவைத்த வீரர்களுக்காக 65 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.
- 55 கோடி ரூபாய் உடன்தான் மெகா ஏலத்திற்கு செல்கிறோம்.
ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு அணிகள் நிர்வாகம் தயாராகி வருகின்றன. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் மெகா ஏலத்தில் உள்ளார். இவரை எந்த அணி எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எம்.எஸ். டோனி இந்த வருடம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது சந்தேகம். அணியின் நீண்ட கால திட்டம் அடிப்படையில் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்கலாம் என யூகங்கள் கிளம்பி வருகின்றன.
ஆனால் ரஷிப் பண்ட்-க்கு மிகப்பெரிய தொகை கொடுக்க வேண்டியிருக்கும். தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, பதிரனா, ஷிவம் டுபே, எம்.எஸ். டோனி ஆகியோரை 65 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது.
இன்னும் கைவசம் 55 கோடி ரூபாய்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த வீரர்களை மற்ற அணிகளுடன் போட்டியிட்டு வாங்கும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "வீரர்களை தக்க வைப்பதற்கு முன்னதாக, நாங்கள் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். டோனி, பயிற்சியாளர் ஆகியோருடன் விவாதித்தோம்.
முந்தைய ஆண்டுகளில் அணியின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் உதவிய வீரர்கள் சிஎஸ்கே அணி மேலும் தொடர மிகவும் முக்கியமானவர்கள் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
இவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுப்பது எளிதாக இருந்தது. இவர்களுடன் குறைந்த கையிருப்பு பணத்துடன்தான் ஏலத்தில் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியாவின் சிறந்த வீரர்களுக்காக மற்ற அணிகளுடம் போட்டியிடன் திறன் எங்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரியும்.
நாங்கள் முயற்சி செய்வோம். இருந்தபோதிலும் அதற்கான வாய்ப்பு இருக்காது என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்" என்றார்.
- பாகிஸ்தான் நபர் 534 புஷ்-அப்ஸ் எடுத்ததே சாதனையாக இருந்தது.
- 22 நாட்களில் இந்தியாவின் ரோஹ்தாஷ் அதை முறியடித்துள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ரோஹ்தாஷ் ஒரு காலால் ஸ்டேண்டிங் புஷ்-அப்ஸ் (one-legged standing push-ups) எடுப்பதில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்துள்ளது.
ரோஹ்தாஷ் 27.875 கிலோ எடையை முதுகில் சுமந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 704 புஷ்-அப்ஸ் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் நபர் 534 புஷ்-அப்ஸ் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவர் 27.200 கிலோவுடன் எடுத்த நிலையில் ரோஹ்தாஷ் 675 கிராம் எடை அதிகமாக வைத்து புஷ்-அப்ஸ் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரோஹ்தாஷ் சவுத்ரி கூறுகையில் "நான் தினந்தோறும் 4 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வந்ததேன். சாதனையை முறியடிக்க முயற்சித்தேன். ஆனால் இந்த சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானதாகும். ஆயிரத்திற்கும் அதிகமான சந்தோகம் அடைந்தவராக இந்த உணர்கிறேன். 22 நாட்களில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்துள்ளேன்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 37 கிலோ எடையை வைத்துக் கொண்டு 537 புஷ்-அப்ஸ் என்ற ஸ்பெயின் சாதனையை 743 புஷ்-அப்ஸ் உடன் முறியடித்தார்.
- இந்திய கிரிக்கெட் அணியுடன் ரிக்கி பாண்டிற்கு என்ன தொடர்பு?.
- ரோகித் சர்மா, கோலி பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி குறிப்பிடத்தகுந்த வகையில் சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் தலைமை பயிற்சியாளர்கள் கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றால் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் "கடந்த ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். மற்றொரு வீரராக இருந்திருந்தால் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கமாட்டார்" என கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில்தான் கவுதம் கம்பீர் பதில் கொடுத்துள்ளார். "இந்திய கிரிக்கெட் அணியுடன் ரிக்கி பாண்டிற்கு என்ன தொடர்பு?. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எதுவாக இருந்தாலும் சரி. அதைப்பற்றி கவலைப்படாமல், அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும்.
அவர்கள் (விராட் கோலி, ரோகித் சர்மா) நம்பமுடியாத வகையில் கடினமான மனிதர்கள். இந்திய கிரிக்கெட்டிற்காக ஏராளமான சாதனைகளை இருவரும் படைத்துள்ளனர். அதேபோல் வரும் காலத்திலும் அதுபோன்ற சாதனையை தொடருவார்கள்.
அவர்கள் இன்னும் பேரார்வத்துடன் இந்திய அணிக்காக பல சாதனைகள் படைக்க வேண்டும் என இருக்கிறார்கள். இது முக்கியமான விசயம்" என்றார்.
2024-ல் விராட் கோலி 6 போட்டிகளில் 12 இன்னிங்சில் 250 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 22.72 ஆகும். ரோகித் சர்மா 11 போட்டிகளில் 588 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 29.40 ஆகும். இரண்டு சதங்கள் இதில் அடங்கும்.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 5 ரன்னில் வெற்றி பெற்றது.
தமுல்லா:
இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் தமுல்லாவில் நேற்று இரவு நடைபெற்றது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 5 ரன்னில் வெற்றி பெற்றது.
பெர்குசன் ஹாட்ரிக் சாதனைபுரிந்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். முதல் போட்டியில் இலங்கை வென்று இருந்தது. இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி நடைபெறும்.
- ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார்.
- தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.
தெலுங்கானாவில் நடந்த என்.எம்.டி.சி. சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தமிழகத்தின் இளம் நட்சத்திரமான ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டம் பெற்றார்.
எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவரான அவர் ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 21-11, 21-14 என்ற கணக்கில் தருண் ரெட்டி கதத்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார். தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.
- ஹார்மோன் மாற்று சிகிச்சையால் (hormone replacement therapy) ஒரு பெண்ணாக மாறியதில், என்னுடைய உடல் கடுயைாக மாறிவிட்டது.
- என்னுடைய தடகள விளையாட்டு திறன்களை இழந்து வருகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர். இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது மகன் ஆர்யன். இவரும் கிரிக்கெட் வீரர்தான். இவர் கடந்த 9 மாதங்களில் ஆணாக இருந்து பெண்ணாக (hormonal transformation journey) மாறியுள்ளார். தற்போது தனது பெயரை ஆர்யன் என்பதை அனயா என்று மாற்றியுள்ளார்.
ஆர்யனாக இருந்து அனயாவாக மாறிய நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தனது இளம் வயதில் இருந்து கிரிக்கெட் எனது வாழ்வில ஒரு பகுதியாக இருந்து வந்தது. எனது தந்தை இந்திய அணிக்காக விளையாடியது, பயிற்சியாளராக இருந்ததை பார்த்து எனக்குள் கனவு தொடங்கியது.
அவருடைய பேரார்வம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் விளையாட்டின் மீது காட்டியது எனக்கு உத்வேகமாக இருந்தது. கிரிக்கெட் என்னுடைய காதல், லட்சியம், எதிர்காலமாகியது.
ஒரு நாள், அவரைப் போலவே எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எனது முழு வாழ்க்கையையும் எனது திறமைகளை மெருகேற்றுவதற்காகவே செலவிட்டுள்ளேன்.
நான் விரும்பிய கிரிக்கெட்டை விட்டுவிடுவதை நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், இங்கே நான் வலியான ரியாலிட்டியை எதிர்கொண்டு வருகிறேன். ஹார்மோன் மாற்று சிகிச்சையால் (hormone replacement therapy) ஒரு பெண்ணாக மாறியதில், என்னுடைய உடல் கடுயைாக மாறிவிட்டது.
என்னுடைய தடகள விளையாட்டு திறன்களை இழந்து வருகிறேன். நீண்ட நாட்களாக நான் விரும்பிய விளையாட்டு என்னை விட்டு நழுவி வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல். ராகுல் ஓபனிங்.
- பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுத் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கவுதம் கம்பீர் கூறியதாவது:-
தற்போது வரை ரோகித் சர்மா இடம் பெறுவாரா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் முதல் டெஸ்டில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரோகித் சர்மா இல்லை என்றால் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் முடிவு எடுப்போம்.
கே.எல். ராகுல் உள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளார். சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்து விளையாட முயற்சிப்போம். பும்ரா தற்போது துணை கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா இல்லை என்றால், பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறுகிறது.
- பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதால் ஹைபிரிட் மாடல் தொடராக நடக்க வாய்ப்பு.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் சென்று இந்தியா பங்கேற்குமா? என்பது குறித்து உறுதிப்படுத்தாமல் இருந்தது.
இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாது. மற்ற இடங்களில் அதாவது பாகிஸ்தானுக்கு வெளியே போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்கும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் எனக் கூறியதாக ஐ.சி.சி. எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐசிசி எங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் எங்கள் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கான இந்த மெயிலை பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட தயக்கம் காட்டி வருவதால் ஹைபிரிட் மாடல் தொடராக இந்த தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் பாகிஸ்தானால் ஹைபிரிட் மாடல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. 2012-13-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு இருநாடுகளுக்கு இடையில் ஒயிட்பால் தொடருக்காக இந்தியா வந்திருந்தது. அதன்பின் 2016 டி20 உலகக் கோப்பை, கடந்த வருடம் நடைபெறற் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தது.
- நியூசிலாந்து தோல்வியை போல் வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன்.
- அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என இழந்து முதன்முறையாக சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்த நிலையில் முதன்முறையாக அஸ்வின் நியூசிலாந்து தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் நாங்கள் தோல்வியடைந்தோம். இதுபோல வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் என்ன செய்வதென்று கூட எனக்கு புரியவில்லை. எனது தொழில் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு சிதறடிக்கும் அனுபவமாக இருந்தது.
நான் இந்த தோல்விக்கு மற்றவர்களை குறைகூறும் நபர் அல்ல. முதலில் நான் என்னிடமே அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். பந்துவீச்சை விட கடைநிலை பேட்டிங்கில் என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை என்பதுதான் பெரிய வேதனையாக இருந்தது.
கடைசியாக ரன்கள் அடிப்பது எப்போதும் அணிக்கு தேவையானதாக இருந்தது. பல நல்ல தொடக்கம் கிடைத்தும் நான் என்னுடைய விக்கெட்டை தவறான நேரத்தில் இழந்தேன். கடைசி டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிக்கு குறைவான ரன்கள் இருந்தபோது தவறாக விக்கெட்டை இழந்தேன். இந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணம்.
வீரர்களான எங்களுக்கு எந்தவிதமான வேதனையும் இல்லை, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் விமர்சங்களை வைத்தனர். எனக்கு புரிகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் எல்லோரையும் விட அணியின் வீரர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வலியும், வேதனையும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.
இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.
டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.
மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.






