என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்த சிதம்பரம்"

    • சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் நடந்தது.
    • இதில் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது.

    இதில் 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். 

    டைபிரேக்கர் முறையில் நடந்த இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோனை அரவிந்த் வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

    சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் மகுடம் சூடினார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.

    ×