என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணியின் பில் சால்ட் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பில் சால்ட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பில் சால்ட் 3 சதம் விளாசியுள்ளார். அந்த மூன்று சதங்களும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 4ம் நிலை வீரரான ரஷியாவின் மெத்வதேவ், 5வது நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை தோற்கடித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 124 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்கா 19வது ஓவரில் வெற்றி பெற்றது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    அந்த அணியின் ஸ்டப்ஸ் போராடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய இலங்கை 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தம்புலா:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 19.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வில் யங் 30 ரன்னும், ஜோஷ் கிளார்க்சன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 3 விக்கெட்டும், துஷாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரை 1-1 சமன் செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • யு மும்பா அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று வரை ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் இன்று உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் தொடங்கியது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ்-யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 39-23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.

    • என்னுடைய சிறுவயதில் நான் எந்த பாலிவுட் படமும் பார்த்ததில்லை.
    • நான் ஷாருக்கானை சந்தித்தபோது அவரிடம் ஒரு ஆரா இருந்தது.

    2025 ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.18 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரிலும் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

    பேட் கம்மின்ஸ் 2014 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். முதன்முதலாக கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடினார்.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கானை தான் முதன்முதலில் சந்தித்த போது அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய கம்மின்ஸ், "நான் சொல்லும் இந்த விஷயம் எனக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். நான் ஷாருக்கானை முதன்முதலில் சந்தித்தபோது அவர் யார் என்று எனக்கு தெரியாது.எனக்கு அப்போது 18 அல்லது 19 வயது இருக்கும் என்று நினைக்கிறேன், இப்போதுவரை நான் எந்த பாலிவுட் படமும் பார்த்ததில்லை.

    நான் ஷாருக்கானை சந்தித்தபோது அவரிடம் ஒரு ஆரா இருந்தது. ஷாருக்கான் சிறந்த ஐபிஎல் உரிமையாளர்களில் ஒருவர்.பல ஐபிஎல் உரிமையாளர்கள் வீரர்கள் மீது அழுத்தங்களை சுமத்தும்போது, அவர் வீரர்களை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாட வேண்டும் என்று கூறுவார்" என்று தெரிவித்தார். 

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு
    • தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறியது.

    2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 39 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.

    • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட பார்டர்- கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
    • இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.

    இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹேஸ்ல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மிட்சல் மார்ஷ் , நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் , மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட்,

    இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
    • கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

    சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் கம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

    நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ தலைமையில் நீண்ட நேரம் ரிவ்யூ மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் கம்பீர் மற்றும் ரோகித்தை தேர்வுக்குழு தலைவர்கள் கடுமையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசாத இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முக்கியமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள் அடித்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சலீம் அயூப் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லான்ஸ மோரீஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு கடைசியாக 2002ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
    • பாகிஸ்தான் சென்று விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைப்ரிட் முறை பின்பற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இது தான் எங்கள் முடிவு, அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்," என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் நவம்பர் 11-ல் இருந்து சாம்பியன் டிராபி தொடங்க 100 நாள் உள்ளது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த ஐசிசி திட்டமிருந்தது. இந்தியா தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் அதனை தற்போது ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் இந்த நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    ×